சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : அக் 29, 2024 07:41 AM
மங்களூரு: சிறுமி பலாத்கார வழக்கில், வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
மங்களூரு டவுனை சேர்ந்தவர் அபுதாகிர், 25. இவரும் 15 வயது சிறுமியும் காதலித்தனர். 2019ம் ஆண்டு சிறுமியை, மங்களூரு ரயில் நிலையத்திற்கு அபுதாகிர் அழைத்துச் சென்றார்.
பராமரிப்பு பணிக்காக தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுக்குள் அழைத்துச் சென்று சிறுமியை பலாத்காரம் செய்தார்.
புகாரின்பேரில் மங்களூரு டவுன் போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது மங்களூரு இரண்டாவது கூடுதல் போக்கோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி பத்ரிநாத் நேற்று தீர்ப்பு கூறினார். அபுதாகிருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.