ADDED : பிப் 01, 2024 06:39 AM

ஹூப்பள்ளி: காங்கிரஸ் அலுவலகம் முன்பு, வாலிபரை கொன்று உடலை எரித்தவர்களை, போலீஸ் தேடுகிறது.
ஹூப்பள்ளி எம்.டி.எஸ்., காலனியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு, நேற்று காலை உடல் கருகிய நிலையில், ஒருவர் இறந்து கிடந்தார்.
உடலின் அருகே ரத்தக்கறை படிந்த பெரிய கல்லும் கிடந்தது.
பழைய ஹூப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் மாருதி நகரின் விஜய பசவா, 25 என்பதும், அவரை யாரோ தலையில் கல்லை போட்டு கொன்று, உடலை எரித்ததும் தெரிந்தது.
ஆனால் அவரை கொன்றது யார், என்ன காரணம் என்று தெரியவில்லை.
கள்ளக்காதல் பிரச்னையா அல்லது நண்பர்களுக்கு இடையிலான பிரச்னையில் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில், விசாரணை நடந்து வருகிறது.
காங்கிரஸ் அலுவலகம் முன்பு, வாலிபர் கொல்லப்பட்டதால், போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர்.