ADDED : பிப் 14, 2024 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுல்தான்பூர்:உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த திருமண விழாவில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உ.பி., மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் பெடுபரா கிராமத்தில், நேற்று முன் தினம் திருமண விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் திடீரென ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இந்தில், ஹேமந்த் மிஸ்ரா,34, என்பவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மிஸ்ரா உடனடியாக காரில் மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் மிஸ்ரா உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

