ADDED : ஜன 16, 2025 09:29 PM
சங்கம் விஹார்: தெற்கு டில்லியில் குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெற்கு டில்லியின் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் சைப் என்ற கோலு, 29. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தார்.
திக்ரி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். தன் வீட்டில் அமர்ந்து கடந்த 12ம் தேதி இரவு தன் நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து கோலு மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.
நான்கு பேரும் சேர்ந்து, கோலுவை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டுத் தப்பினர். இதில் படுகாயமடைந்த கோலு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தைச் சுற்றிப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து ஒரு சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.