பீஹாரில் தேஜ கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்: மற்றொரு கருத்துக்கணிப்பில் தகவல்
பீஹாரில் தேஜ கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்: மற்றொரு கருத்துக்கணிப்பில் தகவல்
ADDED : நவ 12, 2025 06:53 PM

புதுடில்லி: பீஹாரில் தேஜ கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
பீஹார் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. ஓட்டுகள் நாளை மறுநாள்( நவ.,14) எண்ணப்பட உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜ, ஐஜத உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேஜ கூட்டணியே ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளன.
ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை ஏற்கவில்லை. இது பொய்த்து போகும் என அக்கட்சிகள் கூறியுள்ளன. இந்நிலையில் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதிலும் தேஜ கூட்டணி தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
தேஜ கூட்டணி : 121 -141
மகாகத்பந்தன்: 98 - 118 தொகுதிகள் வரை கிடைக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி இந்த தேர்தலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும், அதிகபட்சம் 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெறக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஓட்டு சதவீதம்
கடந்த 2020 தேர்தலில் 43 சதவீத ஓட்டுகள் வாங்கிய தேஜ கூட்டணிக்கு இந்த முறையும் 43 சதவீதம் ஓட்டு கிடைக்கும்.
மகாகத்பந்தன் கூட்டணிக்கு 41 சதவீதமும், ஜன் சுராஜ் கட்சிக்கு 4 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என அந்தக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

