ADDED : ஜூன் 15, 2024 12:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: தவறுதலாக அமைந்துள்ள மத்திய தே.ஜ., கூட்டணி அரசு நீடிக்காது என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது; தேஜ கூட்டணி அரசு தவறுதலாக அமைக்கப்பட்டு உள்ளது. ஆட்சி அமைப்பதற்கான உத்தரவை மோடி பெறவில்லை. இது மைனாரிட்டி அரசு, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கவிழலாம்.
ஆனால், இந்த அரசு நீடிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அது தான் நாட்டிற்கு நல்லது. நாட்டை பலப்படுத்த நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கார்கே கூறினார்.