தேஜஸ் போர் விமான விபத்து அல்ல, சிறிய தொழில்நுட்ப சிக்கல்: விமான நிறுவனம் விளக்கம்
தேஜஸ் போர் விமான விபத்து அல்ல, சிறிய தொழில்நுட்ப சிக்கல்: விமான நிறுவனம் விளக்கம்
ADDED : பிப் 23, 2026 04:33 PM

மங்களூரு: தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதாக வெளியான செய்திகளை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
பிப்ரவரி 7, அன்று பயிற்சியை முடித்துவிட்டு விமானம் தரையிறங்கும் போது, பிரேக் செயலிழந்ததால், ஓடுதளத்தை விட்டு விமானம் வெளியேறியதாகவும், அதனால் அதன் கட்டமைப்பில் சேதம் ஏற்பட்டது,இந்தச் சம்பவத்தின் போது விமானி பாராசூட் மூலம் பாதுகாப்பாக வெளியேறினார், அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பான செய்திகள் பரவின. இந்த செய்தியை மறுத்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இன்று (பிப்ரவரி 23) விளக்கம் அளித்துள்ளது.
அந்த நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
இது வானில் நடந்த விபத்து அல்ல , தரையில் ஏற்பட்ட ஒரு 'சிறிய தொழில்நுட்பச் சிக்கல். தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக வந்த செய்திகள் உண்மையல்ல.
சமகாலத்தில் உள்ள மற்ற போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில், தேஜஸ் உலகின் மிகச்சிறந்த பாதுகாப்பு சாதனங்களைக் கொண்டுள்ளது.இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து இந்திய விமானப்படை உடன் இணைந்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

