ADDED : பிப் 16, 2024 12:07 PM

பாட்னா: பீஹாரில், பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் போது, ராகுல் சென்ற ஜீப்பை, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஓட்டிச் சென்றார்.
மணிப்பூரில் இருந்து மும்பை வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் இரண்டாம் கட்டமாக பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு கட்டமாக இந்த யாத்திரை, பீஹாரின் சசாராம் பகுதிக்குள் நுழைந்தது. அப்போது, ராகுல் வந்த ஜீப்பை, பீஹார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஓட்டிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்திலும் ராகுலுடன் இணைந்து தேஜஸ்வி யாதவ் மேடை ஏற உள்ளார். இதன் பிறகு, இந்த யாத்திரை உ.பி., மாநிலத்திற்குள் நுழைகிறது. ராகுல் பயணித்த ஜீப்பை ஓட்டிச்சென்ற புகைப்படங்களை தேஜஸ்வி யாதவ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.