sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சந்திரசேகர ராவ் மீது தெலுங்கானா முதல்வர் 'பகீர்' புகார்

/

 சந்திரசேகர ராவ் மீது தெலுங்கானா முதல்வர் 'பகீர்' புகார்

 சந்திரசேகர ராவ் மீது தெலுங்கானா முதல்வர் 'பகீர்' புகார்

 சந்திரசேகர ராவ் மீது தெலுங்கானா முதல்வர் 'பகீர்' புகார்


ADDED : பிப் 10, 2026 02:03 AM

Google News

ADDED : பிப் 10, 2026 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: தெலுங்கானாவில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் ஆட்சியில், தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலரை மிரட்டி, 1,500 கோடி ரூபாய் வரை பறிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார்.

தெலுங்கானாவில் சந்திர சேகர ராவ் தலைமையி லான முந்தைய பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் என முக்கிய பிரபலங்களின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தை சிறப்பு புலனாய்வு குழு விசா ரித்து வருகிறது. சமீபத்தில், இந்தக்குழு முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவையும் விசாரித்தது.

இந்த விவகாரம் குறித்து காங்கிரசின் தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று கூறியதாவது:

பி.ஆர்.எஸ்., என்பது, 'பிளாக்மெயில் ராஜகீய சமிதி' என்ற மிரட்டல் அரசியல் குழுவின் சுருக்கமே. முந்தைய ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர் கள் என யாரையும் விடாமல், அவர்களின் தொலைபேசி உரையா டல் ஒட்டுக் கேட்கப்பட்டு ள்ளது.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் பி.ஆர்.எஸ்., 1,500 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பத்திரங்கள் வழியாக சேகரித்துள்ளது.

இந்தப் பணம் யாருடையது? தொழிலதிபர்களை மிரட்டி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு பறித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us