ADDED : மார் 05, 2024 01:02 AM
பிரதமரிடம் ஆதரவு கேட்ட தெலுங்கானா முதல்வர்
தெலுங்கானா மாநிலம் அடிலாபாதில், 53,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வரும், காங்., பிரமுகருமான ரேவந்த் ரெட்டி பேசுகையில், ''பிரதமர் மோடி, என் மூத்த சகோதரர் போன்றவர். மூத்த சகோதரரின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே, ஒவ்வொரு முதல்வரும், தங்கள் மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடியும். குஜராத் போல், தெலுங்கானாவையும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்ற பிரதமரின் உதவி தேவை,'' என்றார்.
ரேவந்த் ரெட்டிக்கு முன், முதல்வராக இருந்த பாரத் ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர ராவ், பிரதமரின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வந்த நிலையில், தற்போது காங்கிரசின் ரேவந்த் ரெட்டி, மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
