தெலுங்கானா எம்எல்ஏ சாலை விபத்தில் உயிரிழப்பு: 10 நாட்களில் 2வது விபத்து
தெலுங்கானா எம்எல்ஏ சாலை விபத்தில் உயிரிழப்பு: 10 நாட்களில் 2வது விபத்து
UPDATED : பிப் 23, 2024 08:28 AM
ADDED : பிப் 23, 2024 08:27 AM

ஐதராபாத்: தெலுங்கானாவில் பாரத ராஷ்ட்ர சமிதி எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களுக்கு முன்பாக நடந்த விபத்தில் இவர் தலையில் காயத்துடன் தப்பியிருந்தார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள படன்சேரு அருகே சுல்தான்பூர் ஓ.ஆர்.ஆர் பகுதியில் அம்மாநில பாரத ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் எம்எல்ஏ.,வான லாஸ்யா நந்திதா காரில் பயணம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த லாஸ்யா நந்திதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.