தெலுங்கானாவோ, தமிழகமோ.. தே.ஜ., கூட்டணிக்கு அமோக ஆதரவு: பிரதமர் மோடி
தெலுங்கானாவோ, தமிழகமோ.. தே.ஜ., கூட்டணிக்கு அமோக ஆதரவு: பிரதமர் மோடி
ADDED : மார் 18, 2024 11:02 AM

புதுடில்லி: தெலுங்கானாவோ, கர்நாடகாவோ, தமிழகமோ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோக ஆதரவு காணப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று (மார்ச் 18) தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மற்றும் கர்நாடக மாநிலம் ஷிவமொகா பகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். ஷிவமொகா பழைய சிறைச்சாலை திடலில் உள்ள சுதந்திர பூங்காவில் நடக்கும் கூட்டத்தில், பாஜ., வேட்பாளர் ராகவேந்திராவை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழகம் வரும் அவர் கோவையில் மாலையில் நடைபெற உள்ள 'ரோடு ஷோ'வில் கலந்து கொள்கிறார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டதாவது: இன்று ஜக்தியால் மற்றும் ஷிவமொகாவில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறேன். அதன்பிறகு மாலையில், கோவையில் நடக்கும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறேன். தெலுங்கானாவோ, கர்நாடகாவோ, தமிழகமோ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோக ஆதரவு காணப்படுகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

