ADDED : பிப் 15, 2026 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தலைநகர் டில்லியில் அதிகபட்ச வெப்பநிலை நேற்று, 28.5 டிகிரி செல்ஷியஸை எட்டியது. இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட 4.1 டிகிரி செல்ஷியஸ் அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், குறைந்தபட்ச வெப்பநிலை 11.1 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது.
டில்லி மாநகரில் இன்று மூடுபனி நிலவும் என கணித்துள்ள வானிலை மையம், வெப்பநிலை அதிகபட்சமாக 28, குறைந்தபட்சமாக 12 டிகிரி செல்ஷியஸ் இருக்கும் என கூறியுள்ளது.
காற்றில் ஈரப்பதம் நேற்று காலை 8:30 மணிக்கு 89 சதவீதமாகவும், மாலை 5:30 மணிக்கு 45 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது. காற்றின் தரக்குறியீடு மாலை 4:00 மணிக்கு 216ஆக பதிவாகி இருந்தது. இது, மோசமான நிலை என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

