தெலுங்கானாவில் கோவில் சிலை உடைப்பு; ஆளும் காங்., மீது பா.ஜ., குற்றச்சாட்டு!
தெலுங்கானாவில் கோவில் சிலை உடைப்பு; ஆளும் காங்., மீது பா.ஜ., குற்றச்சாட்டு!
ADDED : அக் 14, 2024 09:05 PM

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் இன்று கோவில் சிலை சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு, மெத்தனமாக நடந்துகொள்கிறது என பா.ஜ., தலைவர் கிஷன் ரெட்டி குற்றம் சாட்டினார்.
தெலுங்கானாவின் செகந்தராபாத்தில், திங்கள்கிழமை அதிகாலையில் முத்தியாலம்மா கோவிலில் சிலை சேதப்படுத்தப்பட்டதன் எதிரொலியாக, உள்ளூர்வாசிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர், மாநில பா.ஜ.க.,வினரும் போராட்டத்தில் இறங்கினர். போராட வந்த மாதவி லதா உட்பட பல பாஜக தலைவர்களை போலீசார் தடுத்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் மாநில பா.ஜ., தலைவர் கிஷன் ரெட்டி பார்வையிட்டார்.இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து, உள்ளூர்வாசிகள் போலீசிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெலுங்கானா பா.ஜ., தலைவர் கிஷன் ரெட்டி கூறியதாவது:
மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. சிலர் சமூக, மதம் சார்ந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்டவன், திருட வரவில்லை, இந்து சமுதாயத்தை காயப்படுத்தவே,இது போன்ற செயல்களை செய்கின்றனர். ஐதராபாத் உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் மத பிரச்னைகளை ஏற்படுத்துகிறார்கள்.
காங்கிரஸ் தலைமையிலான அரசு, மெத்தனபோக்கை கடைப்பிடிக்கிறது.
இவ்வாறு கிஷன் ரெட்டி கூறினார்.