தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பதவியேற்றார் தற்காலிக சபாநாயகர் கருப்பையா!

பதவியேற்றார் தற்காலிக சபாநாயகர் கருப்பையா!

பதவியேற்றார் தற்காலிக சபாநாயகர் கருப்பையா!


ADDED : மே 10, 2026 04:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 04:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்


தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தனி தொகுதி எம்எல்ஏ கருப்பையா பொறுப்பேற்றார். அவருக்கு கவர்னர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தின் புதிய முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். விஜய் சட்டசபையில் வரும் 13ம் தேதிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என தமிழக கவர்னர் அர்லேக்கர் கெடு விதித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்க வேண்டும். இதனால் தற்காலிக சபாநாயகராக மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ கருப்பையா தேர்வு செய்யப்பட்டார்.

இன்று மாலை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தற்காலிக சபாநாயகராக கருப்பையா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் விஜய், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக சட்டசபை நாளை (மே 11) காலை 9.30க்கு கூடுகிறது. தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பர். சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதனையும் கருப்பையா தான் நடத்த உள்ளார். மே 12 புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். பின்னர் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

யார் இந்த கருப்பையா


* கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் தனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் அவருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

* தற்போது சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து 10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கருப்பையா தமிழக சட்டசபைக்குள் வருகை தந்து இருக்கிறார். தற்போது அவருக்கு தற்காலிக சபாநாயகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

முதல்வரின் செயலர்கள்!


தமிழக முதல்வரின் தனிச்செயலளர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செந்தில்குமார், லட்சுமிபிரியா நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சுகாதாரத்துறை செயலர் செந்தில் குமார் முதல்வர் விஜய்யின் கூடுதல் தலைமை செயலராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை செயலராக இருந்த லட்சுமி பிரியா முதல்வரின் தனிச் செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஓராண்டு பதவியில் இருப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us