ஹரியானாவில் அதிர்ச்சி: டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை கைது
ஹரியானாவில் அதிர்ச்சி: டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை கைது
ADDED : ஜூலை 10, 2025 07:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்: ஹரியானாவில் டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ், 25. டென்னிஸ் வீராங்கனை. மாநில அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் ராதிகாவை அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கியால் 5 முறை சுட்டதில் 3 தோட்டாக்கள் அவர் மீது பாய்ந்தது. தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராதிகா, 'இன்ஸ்டாகிராம் ' சமூக வலைதளத்தில் 'ரீல்ஸ்' போடுவதை முழு நேரமாக செய்து வந்தார். இதனால் கோபமடைந்து மகளுடன் தந்தை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.