சட்டவிரோத மசூதியை இடிக்க முயன்றதால் தாராவியில் பதற்றம்
சட்டவிரோத மசூதியை இடிக்க முயன்றதால் தாராவியில் பதற்றம்
ADDED : செப் 22, 2024 12:57 AM

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியாக தாராவி குடிசைப்பகுதி விளங்குகிறது.
இங்குள்ள 90 அடி சாலையில் மெஹ்பூப் - இ - சுபானி என்ற மசூதியின் ஒரு பகுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், மசூதியின் குறிப்பிட்ட பகுதியை இடித்து அகற்றுவதற்காக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் குழு மசூதி நோக்கி நேற்று காலை வந்தது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள், அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், அதிகாரிகளை மசூதிக்கு செல்லவிடாமலும் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுஉள்ளனர்.
இதையடுத்து, தாராவி போலீஸ் நிலையம் முன் நுாற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து மசூதி நிர்வாகிகள் குழு, மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தாராவி போலீசார் கூடி, மசூதி பிரச்னைக்கு தீர்வு காண பேச்சு நடத்தினர்.