sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ ஹோலி நாளில் நடந்த கொலையால் பதற்றம்; துணை ராணுவம் குவிப்பு

 ஹோலி நாளில் நடந்த கொலையால் பதற்றம்; துணை ராணுவம் குவிப்பு

 ஹோலி நாளில் நடந்த கொலையால் பதற்றம்; துணை ராணுவம் குவிப்பு


ADDED : மார் 07, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 01:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, சிறுமி பறக்க விட்ட பலுான், பக்கத்து வீட்டில் விழுந்தது தொடர்பாக, பத்துக்கும் மேற்பட்டோர் தாக்கியதில் இளைஞர் இறந்தார். இந்த சம்பவத்திற்கு, 24 மணி நேரம் கெடு விதித்துள்ள ஹிந்து அமைப்புகள், இளைஞரை கொன்ற அனைவர் மீதும் கொலை வழக்கு பதிய வேண்டும் என மாநில அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

கடந்த புதன் கிழமை, நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது, உத்தம் நகர் பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர் பறக்க விட்ட வண்ண நீர் நிரம்பிய பலுான், ஹோலி பண்டிகையை கொண்டாடாத மதத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் வீட்டில் விழுந்து வெடித்தது. இதில், அந்த பலுானில் இருந்த வண்ண நீர் சிதறி, அருகில் இருந்த பெண் மீது பட்டது. இது தொடர்பாக, இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.

இந்நி லையில், மாலையில் அந்த வழியாக வந்த தருண் என்ற இளைஞரை, ஹோலி கொண்டாடாத கும்பலை சேர்ந்த பத்து பேர் அடித்து கொன்றனர். இதை அறிந்த அந்த பகுதி ஹிந்து அமைப்புகள், தருணை கொன்ற அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை கொலை குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும் என கூறி, மா நில அரசுக்கு, 24 மணி நேரம் கெடு விதித்துள்ளனர்.

இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. ஏராளமான உள்ளூர் போலீசாருடன், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் எந்த நேரமும் கலவரம் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவுவதால், போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us