sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 பத்தாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை

/

 பத்தாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை

 பத்தாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை

 பத்தாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை


ADDED : பிப் 10, 2026 01:35 AM

Google News

ADDED : பிப் 10, 2026 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பத்தாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக் கொலை செய்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.

டில்லி மங்கோல்புரியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன் நேற்று காலை, தேர்வு எழுத பள்ளிக்கு சென்றான்.

செல்லும் வழியில், வழிமறித்த சிலர், மாணவனை கத்தியால் சரமாரியாகக் குத்தினர். மண்டை ஓட்டில் கத்தி சிக்கியவுடன், கொலையாளிகள் தப்பி ஓடினர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவனை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, உடற்கூறு ஆய்வுக்காக மாணவன் உடல், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த மங்கோல்புரி போலீசார், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us