ADDED : பிப் 26, 2025 07:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாயாபுரி: பைபர் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.
மாயாபுரி பேஸ் 2ல் பைபர் மற்றும் பிளாஸ்டிக் பம்பர் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து ஒன்பது தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர்.
தரை மற்றும் மூன்று தளங்களைக் கொண்ட பரந்து விரிந்த ஒரு தொழிற்சாலையில் நீண்ட நேரம் போராடி தீயை தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

