தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ திருமண நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து

திருமண நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து

திருமண நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து


ADDED : டிச 13, 2024 12:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 12:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாஸ்திரி பார்க்: வடகிழக்கு டில்லியில் உள்ள விருந்து மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்தபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சாஸ்திரி பார்க் அருகே உள்ளி ஒரு விருந்து மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது மாலை 5:01 மணி அளவில் அங்கு தீ விபத்து ஏற்பட்டதாக, தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து ஐந்து தீயணைப்பு வண்டிகள் மண்டபத்திற்கு விரைந்தன.

திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஓரிடத்தில் இருந்து தீப்பிழம்புகள் சிறிது நேரத்தில் முழு பகுதியையும் சூழ்ந்தன.

தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. தீ விபத்தின்போது, விருந்து மண்டபத்திற்குள் சிலர் சிக்கிக்கொண்டனர், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us