தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஐதராபாத்தில் தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவாத அமைப்பு மிரட்டல்; பாதுகாப்பு உஷார் நிலை!

ஐதராபாத்தில் தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவாத அமைப்பு மிரட்டல்; பாதுகாப்பு உஷார் நிலை!

ஐதராபாத்தில் தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவாத அமைப்பு மிரட்டல்; பாதுகாப்பு உஷார் நிலை!

2


ADDED : நவ 23, 2026 08:17 AM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : நவ 23, 2026 08:17 AM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

2008 மும்பைத் தாக்குதல்களைப் போன்றே நவம்பர் 26ம் தேதி ஐதராபாத்தில் தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவாத அமைப்பு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது. ஐதராபாத் போலீசார் நகரம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிடம் இருந்து வந்த மிரட்டல் மின்னஞ்சலில், ''ஐதராபாத்தில் காச்சிகுடா ரயில் நிலையம் மற்றும் காச்சிகுடாவில் உள்ள ஹோட்டல் டூரிஸ்ட் பிளாசா ஆகிய இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தப்படும்.

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உறுப்பினர் லத்தீப் பட் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக நடத்தப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது. போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் நகரின் முக்கியப் பகுதிகளிலும் தீவிர சோதனைகளை மேற்கொண்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இது ஒரு புரளியாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மின்னஞ்சல் அனுப்பியவர்களைக் கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் வதந்திகளை நம்பவோ பரப்பவோ வேண்டாம்; அமைதி காக்குமாறும் ஐதராபாத் போலீசார் கேட்டுக்கொண்டனர். சந்தேகத்திற்கிடமான நபர்களையோ அல்லது கேட்பாரற்றுக் கிடக்கும் பொருட்களையோ கண்டால் உடனடியாக 112 என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us