தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; உயிர் பிழைத்தவர்கள் கண்ணீர் பேட்டி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; உயிர் பிழைத்தவர்கள் கண்ணீர் பேட்டி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; உயிர் பிழைத்தவர்கள் கண்ணீர் பேட்டி


UPDATED : ஏப் 22, 2025 10:29 PM

ADDED : ஏப் 22, 2025 08:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 22, 2025 10:29 PM ADDED : ஏப் 22, 2025 08:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள், தங்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து பேட்டி அளித்துள்ளனர்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியின் பைசாராம் பகுதியில் 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கூடியிருந்த போது, அங்கு வந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 2 அல்லது 3 பேர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. துப்பாக்கிச்சூடு துவங்கியதும், சுற்றுலா பயணிகளை நம்பியிருக்கும் கைடுகள், சிறுவணிகர்கள் அனைவரும் தப்பியோடி தலைமறைவாகினர்.

தொடர்ந்து அங்கு காயமடைந்தவர்கள் உதவி கேட்டு கதறிய வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

அதில் ஒருவர், தங்களின் பெயரை கேட்டதும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்து உள்ளார்.

மற்றொருவர், தாங்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் என்பதால் தாக்கப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.

மற்றொரு வீடியோவில், தனது கணவன் உயிரை காப்பாற்றும்படி பெண் ஒருவர் கதறி அழும் காட்சிகள் பதிவாகி உள்ளன

இன்னொரு வீடியோவில், பயங்கரவாதிகள் வந்த திசையை பெண் ஒருவர் காட்டினார்.

கர்நாடகாவை சேர்ந்த பல்லவி என்பவர் கூறுகையில், கணவர் மஞ்சுநாத், மகன் உடன் சுற்றுலா சென்றோம். பயங்கரவாதிகள் தாக்குதலில் எங்கள் கண் முன்னர் கணவர் உயிரிழந்தார். என்னையும் கொன்றுவிடும்படி கூறியபோது, உன்னை கொல்ல முடியாது. போய் மோடியிடம் கூறு என்றனர். எங்களை உள்ளூர் மக்கள் தான் காப்பாற்றியதாக தெரிவித்தார்.

இது போன்று இன்னமும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us