தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஜம்முவில் பயங்கரவாதிகள் பதுங்குமிடம் அழிப்பு; ஆயுதக்குவியல் கண்டுபிடிப்பு

ஜம்முவில் பயங்கரவாதிகள் பதுங்குமிடம் அழிப்பு; ஆயுதக்குவியல் கண்டுபிடிப்பு

ஜம்முவில் பயங்கரவாதிகள் பதுங்குமிடம் அழிப்பு; ஆயுதக்குவியல் கண்டுபிடிப்பு

2


ADDED : ஜூலை 07, 2026 02:43 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : ஜூலை 07, 2026 02:43 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்குமிடத்தில் இருந்து ஏராளமான ஆயுதக் குவியலை ராணுவம் கண்டறிந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் உளவுத்துறை தகவல் அடிப்படையில் ராணுவம் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் குப்வாரா மாவட்டம், கேரன் செக்டார் பகுதியில் சோதனை நடத்தினர்.

சோதனையில் அங்கு பதுங்குகுழி ஒன்று இருப்பது ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். அதனுள் சென்று பார்த்த போது 5 ஏகே ரக துப்பாக்கிகள், 9 ஏகே ரக துப்பாக்கிக்குண்டுகள், கைக்குண்டுகள், வெடி மருந்துகள் மற்றும் போர் தொடர்பான ஏராளமான பொருட்கள் இருப்பதை கண்டனர்.

அனைத்தையும் கைப்பற்றிய ராணுவத்தினர், தேடுதல் வேட்டையை விரிவுபடுத்தி உள்ளனர். ஏதேனும் நாசவேலைக்கு திட்டமிட்டு, பயங்கரவாதிகள் பதுங்குமிடத்தை அமைத்து இருக்கலாம் என்பதால் கூடுதல் படைகளுடன் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us