தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பயங்கரவாத சதி திட்டம் முறியடிப்பு

 பயங்கரவாத சதி திட்டம் முறியடிப்பு

 பயங்கரவாத சதி திட்டம் முறியடிப்பு


ADDED : பிப் 26, 2026 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கனி வனப்பகுதியை ஒட்டிய மெந்தார் செக்டாரின் சலானி கஸ்ப்பிளாரி கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸ் சிறப்பு நடவடிக்கை குழுவினர் ராணுவத்தின் உதவியுடன் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதி குகையில் பயங்கரவாதிகள் மறைவிடம் இருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

மேலும், அந்த குகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐ.ஈ.டி., எனப்படும், 4.5 கிலோ எடையுள்ள மேம்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, 800 கிராம் எடையுள்ள சிறிய ஐ.ஈ.டி., இரண்டு சீன கையெறி குண்டுகள் மற்றும் பல்வேறு ரக கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இ தன் மூலம், எல்லை மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட் டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us