காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: முன்னாள் ராணுவ வீரர் பலி
காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: முன்னாள் ராணுவ வீரர் பலி
ADDED : பிப் 03, 2025 04:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினரை பயங்கரவாதிகள் சுட்டதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பலியானார்.
காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ரெட்வானியில், முன்னாள் ராணுவ வீரர் முகமது சாதிக் வசித்து வருகிறார். இவர் மீது குறி வைத்து  பயங்கரவாதிகள், அவரது வீட்டை  துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சம்பவத்தில் முகமது சாதிக் படுகாயமடைந்து உயரிழந்தார். மேலும் அவரது மனைவி மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

