ADDED : ஜூன் 01, 2025 12:52 AM

ஹைதராபாத் : ஹைதராபாதில் நேற்று இரவு நடந்த உலக அழகி போட்டியில், தாய்லாந்தின் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ, 21, மகுடம் சூடினார்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், 72வது உலக அழகி போட்டி மே 10ம் தேதி துவங்கியது. இதில், 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். முதற்கட்ட போட்டிகளில் வென்று, 40 பேர் காலிறுதி போட்டிக்கு தேர்வாகினர். அவர்களில் எட்டு பேர் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர். அந்த எட்டு பேரில் இந்திய அழகி நந்தினி குப்தா இடம்பெறவில்லை.
இந்நிலையில், நேற்று பிரமாண்ட இறுதி போட்டி நடந்தது. இதில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ உலக அழகி பட்டம் வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, உலக அழகிக்கான கிரீடத்தை அணிவித்தார். ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்ந்த ஹாசெட் டெரஜி இரண்டாவது இடத்தையும், ஐரோப்பிய நாடான போலந்தை சேர்ந்த மஜா கிலாஜ்டா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.