சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 25ல் தைப்பூச தெப்ப திருவிழா
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 25ல் தைப்பூச தெப்ப திருவிழா
ADDED : ஜன 22, 2024 06:21 AM

ஹலசூரு: ஹலசூரு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும் 25ம் தேதி தைப்பூச திருவிழா நடக்கிறது.
பெங்களூரு ஹலசூரு பழைய மெட்ராஸ் சாலையில், சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தமிழர்கள் அதிகமாக உள்ள இந்த கோவில், ஹிந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் உள்ளது.
ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், 55வது ஆண்டு தைப்பூச விழா, வரும் 24ம் தேதி முதல், மூன்று நாட்கள் நடக்கின்றன. மூன்று நாட்களும் மாலை 6:30 மணிக்கு, தெப்ப உற்சவம் நடக்கிறது.
இதற்கான முதல் பூஜை நேற்று செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது. காவடி மற்றும் அலகு குத்துபவர்கள் காப்பு கட்டி கொண்டனர். இரண்டாவது நாளான வரும் 25ம் தேதி காலை 11:00 மணிக்கு, தைப்பூச திருவிழா நடக்கிறது.
மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைசி நாளான 26ம் தேதி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி கொண்டும், காவடி எடுத்தும் வருவர்.
மூன்று நாட்களுமே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.