தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
ADDED : ஜன 30, 2024 11:43 PM
பெங்களூரு : 'பயணியர் வசதிக்காக, எஸ்.எம்.வி.டி., என்ற பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா முனையத்தில் இருந்து பீஹார் மாநிலம், தானாபூர் செல்லும் 10 ரயில்கள் பயணம், மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது,' என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
ரயில்வே அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
l ரயில் எண் 03245 தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் ஏப்., 24 வரை
l எண் 03246 எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூர் வாராந்திர ரயில், ஏப்., 26 வரை
l வாரத்தில் இரண்டு முறை இயங்கும் எண் 03251 தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், ஏப்., 29 வரை
l எண் 03252 எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூர் சிறப்பு ரயில் மே 1 வரை
l எண் 03259 தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வாராந்திர ரயில் ஏப்., 30 வரை
l எண் 03260 எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூர் வாராந்திர சிறப்பு ரயில், மே 2 வரை
l எண் 03247 தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வாராந்திர ரயில், ஏப்., 25 வரை
l எண் 03248 எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூர் வாராந்திர ரயில் ஏப்., 27 வரை
l எண் 03241 தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் ஏப்., 26 வரை
l எண் 03242 எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூர் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்., 28 ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.