sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் செக் போஸ்ட்!

/

தங்கவயல் செக் போஸ்ட்!

தங்கவயல் செக் போஸ்ட்!

தங்கவயல் செக் போஸ்ட்!


ADDED : நவ 11, 2024 05:15 AM

Google News

ADDED : நவ 11, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவமதிப்பு

கோளாறான மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர், தொகுதி அசெம்பிளி காரர்களை கொஞ்சம் கூட மதிப்பதில்லையாம். மாவட்டம் பற்றி எதுவுமே தெரியாதவரிடம் பொறுப்பை கொடுத்திருப்பவர் மீது வெறுப்பு தான் அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் தொகுதி வாரியாக வளர்ச்சி பணிகள் பற்றி கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதற்கு முந்தைய பொறுப்பு அமைச்சர்கள், பம்பரமாக சுழன்று, அந்தந்த தொகுதி அசெம்பிளிகாரர்களின் கருத்து அறிந்து தேவைகளை நிறைவேற்றினர்.

தற்போதைய பொறுப்பு அமைச்சர், முதல்வரின், 'முடா' பிரச்னையில் மூழ்கி இருக்கிறார். மற்ற பிரச்னைகள் பற்றி கவலை இல்லாதவராக இருக்கிறார்.

இவரோட பொறுப்பின் கீழ் உள்ள கோல்டு சிட்டி பெமல் தொழிற்சாலை மூழ்கும் கப்பலாக இருக்குது. இது இவரின் கவனத்தை எட்டவில்லையோ?

நிலம் விழுங்கும் கில்லாடிகள்

சீனிவாசப்பூர் தொகுதி, 'மாஜி' கைக்கார அசெம்பிளிக்காரர், பெரிய பதவியில் இருந்தவர். இவர் வனப்பகுதியின் நிலம் ஆக்கிரமிப்பில் சிக்கி இருக்கிறார். ஆக்கிரமிப்பு நிலத்தை மறு சர்வே செய்ய விடாமல் அரசு ஆதரவில், அதிகாரிகளை செயல் படாமல் தடுத்து வருகிறாராம்.

சட்டம் அறிந்தவர் என்பதால் சட்டத்துக்கு கட்டுப்படாமல் நிலத்தை ஏப்பமிடலாமா. இவருக்கு ஒரு நியாயம்; மற்றவர்களுக்கு ஒரு நியாயமா. சட்டத்தை மதிக்காதவர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும். அரசு நிலத்தை கையகப்படுத்த வேண்டும்.

நிலம் விழுங்கும் அரசாக இருப்பதற்கு, இதுவும் ஒரு சாட்சியாக உள்ளது. கை காரர்கள் ஒவ்வொரு தொகுதியிலுமே நிலம் சுருட்டும் பலே கில்லாடிகளாக, கை காரர்கள் இருக்குறாங்க.

ப.பேட்டையில் புதிய சிட்டி நிலம் ஏரி நிலமாம். கோல்டு சிட்டியில் சமூக நலத்துறை ஒதுக்கிய சட்டபிதா பவன் நிலம் என்ன ஆனது; யாருக்கு கைமாறப் போகுது.

எதிர்பார்ப்பு

கோல்டு சிட்டியில் பெமல் ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்துக்கு, கோல்டு மண்ணில் நாங்களும் அமைப்பு வைத்திருக்கிறோம்னு அடையாளப்படுத்தி வர்றாங்க. ஆனால், இவர்களது போராட்ட முடிவு, யார் கையில் என்பதே எதிர்பார்ப்பு. 'உங்கள் முடிவு உங்கள் கையில். நீங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்' என்று செங்கோட்டைக்காரர் சொன்னதால் அவரை ஒரு மாதிரியா பார்க்குறாங்க.

தயக்கம் ஏன்?

மூடி கிடந்த தபால் நிலையத்தை திறந்தாச்சு. அதேபோல் மூடி விட்ட ஊர்க்காவல் படையின் ஆபீசை எப்போது தெறப்பாங்களோ. கோல்டு சிட்டியில் காக்கிகளுக்கு நிகராக பாதுகாப்பு பணியில் உள்ள இவர்களின் அலுவலகத்தை சீரமைக்க, மைன்ஸ் காரங்க உதவலாமே!

நுாற்றுக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர், அலுவலக பணிகளுக்கு கோலாருக்கு ஓட வேணுமா. மைன்சின் பல ஏக்கர் நிலம், பங்களாக்கள் ஆக்கிரமிப்புகள் எக்கச்சக்கமா இருக்குது. அதை கண்டு கொள்ளாமல், இருக்காங்களே. ஊரையே பாதுகாக்கிற ஊர்க்காவல் படை அலுவலகம் சீரமைக்க தயக்கம் ஏன்?






      Dinamalar
      Follow us