sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் செக் போஸ்ட்

/

தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்


ADDED : டிச 31, 2024 05:22 AM

Google News

ADDED : டிச 31, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குடைச்சல்... உடைச்சல்!

கட்சி, ஜாதி, மொழி, மதங்களை தவிர்த்து கோல்டு சிட்டி மண்ணின் மைந்தர்sகளை ஒருங்கிணைக்கும் கூட்டம், ஒன்று சேர போறாங்களாம். ஆனால், இந்த சிட்டிக்கு தாய் வீடாகவோ, புகுந்த வீடாகவோ இல்லாதவங்களின் குடைச்சலால் உடைச்சலை செய்து வர்றாங்க.

மண்ணின் மைந்தர்களை அரசியல், சமூக ரீதியாக இணைய விடாமல் தடுக்க சிலர் உள்குத்து வேலைகளை செய்து வருவது, நகரில் புகைச்சலாக கிளம்பி இருக்குது.

ஒருவரை ஒருவர் சேர விடாமல் பிரித்தாளும் ஆக் ஷனில், பவர் உள்ளவரு இறங்கி இருப்பதாக. பரவலாக பேசப்படுகிறது. கட்சி, வண்ணம் காரணம் காட்டி ஒற்றுமையை சிதைத்து ஒரே எண்ணம் உள்ளவர்களை திசை திருப்புறாங்க.

எப்படியும் மண்ணின் மைந்தர்களை விரோதிகளாக்கும் வேலை நடக்கிறது. முதல் கட்டமாக கை காரர்களை நழுவிச் செல்ல வைத்திருக்காங்க.

***

* கால்நடைகளுக்கு சுதந்திரம்

தங்கமான நகரில் உள்ள மண்வாரி கனரக வாகனங்கள் தயாரிக்கிற பேக்டரி ராணுவத்துறைக்கு சொந்த மானது. யாரும் நுழையாத படி கண்காணிக்கிறாங்க. ஆனா, இதன் ஹெலிபேடில் கண்காணிப்பு இருப்பதா தெரியல. மாடுகள், மான்கள், தெருநாய்கள் நடமாடுகின்றன. இதுக்கு ஹெலிபேடில் கால்நடைகளின் கழிவுகளே சாட்சி.

ஹெலிகாப்டரில் வி.வி.ஐ.பி.,ங்க வந்து இறங்குற இந்த இடத்தில் என்ன பாதுகாப்பு இருக்க போகுதோ. வாலாட்டும் கால்நடைகளுக்கு இருக்கிற சுதந்திரம் கூட மனிதர் களுக்கு இல்லையேன்னு சொல்றாங்க.

***

* பாயுது சாக்கடை

ரா.பேட்டை பஸ் நிலையத்தில் சாக்கடை கழிவுநீர் பாய்கிறது. ஒரு வாரமா பயணியர் பாடு திண்டாட்டமா இருக்குது. அங்குள்ள கடையை கூட மூடிட்டாங்க. கண்ணுக்கு தெரியாத விஷக்கிருமிங்க நிறைந்த சாக்கடை கழிவால் தொற்று நோய் பரவும் ஆபத்து இருக்குது.

இது முனிசி., ஆபீசர்கள் கவனத்துக்கு வரலையா. தெரிந்தும் கண்ணை, மூக்கை மூடிக் கொண்டு இருக்காங்களா. ஏற்கனவே நுரையீரல், இதய நோய் பாதிப்புக்கு டாக்டரோ மருத்துவ வசதியோ இல்லன்னு தெரியுது.

இந்த லட்சணத்தில் சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதை அலட்சியம் காட்டுறாங்களோ. சுகாதாரத்துக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்றோமுன்னு சொல்வதை கேட்க முடியுது. ஆனா, செயலில் ஒண்ணையும் காணல.

கொரோனா காலத்தில் அணிந்த முக கவசத்தை ரா.பேட்டை பஸ் நிலையத்தில் தொடர வேண்டியது கட்டாயமாகி விட்டது.

தொற்று நோயை பரப்புற சாக்கடை கழிவு நீரை, யார் கவனிக்க போறாங்களோ. தாலுகா சுகாதார துறைக்கு இதை விட வேறென்ன வேலையோ.

***

* மறக்கணுமா?

முனிசி.,யில் ஸ்டாண்டிங் கமிட்டி சேர்மன் பதவிக்கு சில கவுன்சிலர்கள் காத்திருக்காங்க. ஆனால் அந்த பதவியை வழங்க விடாமல் செய்யும் வேலை நடந்து வருது. ஏற்கனவே மூன்றரை ஆண்டு முழுசா முடிந்தும் கூட, அதனை கவனத்துக்கு கொண்டு வராமல் மறக்க வெச்சிருக்காங்க.

இப்பவும் சிலர், தமக்கு வாய்ப்பு கிடைக்குமான்னு ஏக்கத்துடன் இருக்காங்களாம். நியமன உறுப்பினர் பதவிக்கு ஓரிடம் காலி இருக்குது. அதனையும் நிரப்ப வேணுமாம்.

ஏற்கனவே மைசூரு முடா போல 'குடா' தலைவர் பதவிக்கு கோல்டு சிட்டிகாரங்க ஏமாந்தது போல காலியா உள்ள பதவிகளையும் மறக்க வேண்டியது தானான்னு கை கட்சிக்குள் ஒரு தரப்பினர் புழுங்குறாங்க.

***






      Dinamalar
      Follow us