sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் செக் போஸ்ட்

/

தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்


ADDED : ஜன 02, 2025 08:43 PM

Google News

ADDED : ஜன 02, 2025 08:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'எக்ஸ்மஸ்' பண்டிகைக்காக 'பெனிபிட் ஸ்கீம்' பேரில் அதை தாரேன், இதை தாரேன்னு பட்டியல் போட்டு காண்பிச்சாங்க.

அதன் படி எதையுமே தராமல், பல ஆயிரம் பேரிடம் மாதா மாதம் வசூலித்த மொத்த தொகையும் ஸ்வாஹா செய்திட்ட விவகாரம் சிட்டி முழுக்க சிரிப்பா சிரிக்குது.

இந்த மோசடியில் யார் யாருக்கு பங்கு இருக்குதுன்னு காக்கிக்காரங்க துருவ தொடங்கிட்டாங்க.

அவங்களுக்கும் பண்டிகையை கொண்டாட காட்டில் செம மழையாம்.

மோசடி செஞ்சவங்க பின்னணியில், சில அரசியல் புள்ளிகள் இருக்காங்களாம். அவங்கள காப்பாற்ற சட்டத்தை ஏமாத்தும் குறுக்கு வழியை தேடுவதாக பேசிக் கிறாங்க. இது நான்கரை 'சி' விவகாரமாம்.

மருத்துவமனையில் எல்லா சலுகையும் இருக்குதென, மூத்த கைக்கார தலைவரு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்திருக்காரு.

கட்டடம் தான் ஸ்ட்ராங். மற்றவை பற்றி, அவர் ஒண்ணுமே தெரியாதவர் போல பேசியிருக்காரு. இதயநோய் மருத்துவர் இருக்கிறாரா. ஸ்கேனிங், டயாலிசிஸ் மருத்துவர் cஇருக்காங்களா.

ஜெய தேவா இதய பிரிவு மருத்துவமனை கிளையை ஏற்படுத்த, 'அவங்க நாங்க ரெடி' என்று சொல்லியும் யாருமே கண்டுக்கலயே. இதுவரை வந்த பாடில்லையே.

'ஐசியு' பிரிவுக்கு அறை தயார் செய்தும், இதுவரை அது இயங்குதான்னு தெரியுமா. அப்படி இருக்க, எதை வைத்து அவர் பெருமையா, ஓவரா பேசினாரோ. யார் மெச்சிக்க ஆஹா... ஓஹோ... ன்னு பேசினாரோ. எதுக்கு முலாம் பூசினாரோ.

கோல்டு மைன்ஸை மூடி 24 ஆண்டு முடிஞ்சிருக்கு. இதன் குடியிருப்பு பகுதியில் 35,000 வீடுகள் இருக்குது. இதில் ஐந்து தலை முறையாக முன்னாள் தொழிலாளர் குடும்பத்தினரே வாழ்கின்றனர். வீடுகளை குடியிருப்போருக்கு இன்னும் சொந்தம் ஆக்கப்படலை. குடியிருக்றவங்க வரி செலுத்த தயாரா இருந்துங் கூட, அதுக்கான வழியும் பிறக்கல.

மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கல. 2024 ல் லோக்., தேர்தலுக்கு முன் பூக்கார ம.அரசின் மந்திரியை வரவழைத்து, மைன்ஸ் மூடும் போது ஆஜர் பட்டியலில் இருந்த 3,200 தொழிலாளர் வீடுகளுக்கு மட்டுமே பொசிஷன் சர்ட்டிபிகேட் வழங்க ,பெரிய விழா நடத்தினாங்க.

அன்று ஒரே நாளில் 1,000 பேருக்கு தான் பொசிஷன் சர்ட்டிபிகேட் கொடுத்தாங்க. மற்றவர் களுக்கு இதுவரையில் வழங்கல. அந்த சர்டிபிகேட்டில் அப்போதைய மைன்ஸ் மந்திரி படம் பிரின்ட் செய்திருந்தாங்க.

தற்போது வேறொருவர் மைன்ஸ் மந்திரி பதவியில் இருப்பதால், அந்த சர்ட்டிபிகேட்டை வழங்க முடியாமல் குழம்பி இருக்காங்க.

அப்போது இருந்த செங்கோட்டைக்காரர் பூக்காரர்; இப்போது இருப்பவரோ புல்லுக்கட்டுக்காரர்.

இதன் முடிவு அறியாமல், இங்கு வசிக்கிறவங்க குழப்பத்தில் இருக்காங்க. இதுவும் ஒரு தொடர்கதை..

ரா.பேட்டை 3வது கிராசில் சட்டப்பிதா பெயரில் ஒரு பவன் ஏற்படுத்தினாங்க. இதில் படிப்பகம், நுாலகம் அமைப்பதாக சொன்னாங்க. 20 ஆண்டா யாருமே கண்டுக்கல. அந்த கட்டடம் எதுக்கு பயன்படுதுன்னு பலரும் பல விதமாக பேசி வந்தாங்க. ஆனாலும் எதுக்காக ஏற்படுத்தினாங்களோ, அதன்படி செயல் படுத்தல.

ஆனால், திடீரென அந்த கட்டடம் மீது பொறுப்பானவங்களுக்கு கவனம் வந்திருக்குது. அங்கன்வாடி மையமாக மாத்தப்போறாங்களாம்.

துறை மாறும் நுாலக கட்டடம்








      Dinamalar
      Follow us