* மின்னுமா கோல்டு சிட்டி?
கோல்டு சிட்டியையும் மாநகராட்சி ஆக்க போறாங்களாம். இதுக் காக, ப.பேட்டை டவுன் சபை பகுதிகளை இணைக்கிற திட்டம் அரசின் டேபிளில் இருக்குதாம். ஏற்கனவே, ரெண்டு தொகுதிக்கும் சேர்ந்தாப்ல கோல்டு சிட்டி பேர்ல, டெவலப்மென்ட் அத்தாரிட்டியும் இருக்குது. இதனால் மாநகராட்சி ஆவதற்கு சாத்தியம் இருப்பதாக 'டாப் லெவல்' டிஸ்கஷன் நடத்தி வராங்க.
ஏற்கனவே, புதுசா இண்டஸ்ட்ரியல் டவுன் ஷிப் உருவாகும் திட்டமும், வெளிநாட்டு தொழில் முதலீட்டாளர்கள், வரப்போறாங்க. கோடான கோடி, நிதி வந்து கொட்டப் போகுது. லட்சுமி கடாட்சம் எல்லா திசைகளிலும் வீசப்போகுது.
பொன் விலையை போல இங்கு மண் விலையும் எகிறுது. அதனாலே காலி இடமெல்லாம் மனை ரேட்டு ஏறுமுகமானது. இதனாலே ஊரை அறிந்து லேண்ட் பிஸ்னஸ் மதிப்பு கூடியிருக்கு. பெங்களூரு -- சென்னை எக்ஸ்பிரஸ் காரிடார் கோல்டு சிட்டிக்குள் வந்தாச்சு. 30 கி.மீ., தூரத்தில் ஏ.பி., மாநிலம் குப்பத்திலும் விமான நிலையம் உருவாக்க போறாங்களாம். அதனால், இங்கு மாநகராட்சி தரம் பெறும் நம்பிக்கை ஏற்பட்டிருக்குது. கோல்டு சிட்டியும் தரத்தில் மின்னப் போகுது.
-------
* தங்கம் மேலே வருமா?
உலோக பொருட்களை எங்கெங்கு இருக்குதென கண்டறிய பல கோடிகளை சென்ட்ரல் கவர்மென்ட் 'ரிசர்ச்' பேரில் செலவு செய்து வராங்க. கோல்டு இருக்கிறது என்று தெரிந்தும் கூட, அதனை எடுக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த, திட்டம் ஏற்படுத்த, பொருளாதார மேதைகள், கவனத்திற்கு வரலயோ. ஒரு கிராம் தங்கம் தற்போது 7450 ரூபாய்.
தங்கச் சுரங்கம் மூடின 2001ல் அப்போதைய விலை 2,000 ஐ கூட தொடவில்லை. தங்கத்தை முதலீடாக வைத்து முதல் ஐந்தாண்டு திட்டத்தை நிறைவேற்ற உலக வங்கி கடன் வாங்கியதை நினைவுபடுத்தி, மறுபடியும் கோல்டு தேவையை அறிவார்களான்னு மைன்ஸ் விபரம் தெரிந்தவங்க கேட்கிறாங்க. துாங்கும் தங்கம் மேல வருமா?
-------
* தேடுங்கள் ஆபீசர்களை!
தங்கமான நகரில் உப லோக் ஆயுக்தா திடீர் வருகைக்கு யார் காரணம். இதுபற்றிய விபரத்தை கண்டறிய பல தரப்பில் துருவ தொடங்கி இருக்காங்க. சில சமூக ஆர்வலர்கள் பேரில் சந்தேகம் ஏற்பட்டிருக்குது. ஆபீசுகளில் ஆபீசர்கள் இருப்பதே இல்லை என்ற குடைச்சல் பொறுப்பானவங்களுக்கே இப்போது தான் தெரிந்திருக்குதாம்.
ஆபீசுகளில் துறைதோறும் சில பினாமிகள் கமிஷன் வசூலிக்கி றாங்க. இவர்களால் தான், ஆபீசர்களும் தெனாவட்டு காட்டுறாங்க. இருக்கைகளில் இருப்பதில்லை. இதுவும் லோக் ஆயுக்தா கவனத்துக்கு போயிருக்கு.
அரசு மருத்துவமனையில் ஊழல் தான், அவங்க கவனத்துக்கு பெருசா போயிருக்கு. அவங்களும் வந்தாங்க. போனாங்க. என்ன சாதிச்சாங்க. நாங்களும் இருக்கிறோம்னு வந்து அடையாளம் காட்டினாங்க. முடிந்ததா அவர்களது வேலை.
-------
* தீர்மானங்கள் பூஜ்யம்!
தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி நிலையம் ஏற்படுத்தினதே கோல்டு சிட்டிக்காக தான். இது கோல்ட் சிட்டிக்கு உள்ள பழம் பெருமை. ஆனால் இங்கு அடிக்கடி மின் தடை ஏற்படுவது சகஜமாகி விட்டது.
இங்கு தனியார் தகன மையம் தான் இருக்குதே தவிர, அரசின் 'மின் தகன மையம்' ஏற்படுத்த வேணும்னு அரசு கவனத்துக்கு போனதாக தெரியல. இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் மின் தகனம் அவசியம் என்கிறவர்கள், கோல்ட் சிட்டியில் ஏற்படுத்தலாமே
ஒரே நேரத்தில் விறகு வைத்து எரித்து தகனம் செய்ய நான்கைந்து உடல்கள் வந்து விட்டால் திண்டாட்டம் ஆகிறது. மின் தகனம் அவசியம் தேவை என்பற்கு முனிசி.,யில் நோ ஆக் ஷன். 30 வருஷமா இறந்தவர் உடல்களை எடுத்துச்செல்ல வாகனம் கேட்டு கேட்டு தீர்மானம் நிறைவேற்றுறாங்களே தவிர, அது கூட நிறைவேற்றபடல.
முனிசி.,யில் ஒவ்வொரு கூட்டத்திலும் பல தீர்மானங்களை நிறைவேற்றுறாங்களே தவிர, அவைகள் அமலுக்கு வருவது பூஜ்யமாக உள்ளது. மின் தகன மையம் அமைக்க தீர்மானம் போட்டாலும் அமையுமா. ஒருவேளை அரசே முன் வந்து அமைத்தால் தான் உண்டு. இதுக்கு அப்புறம் முனிசி.,யில் என்ன வேலை தான் நடக்குதோ.
***