மாநில கைவினை மேம்பாட்டுக்கழகத்தோட தலைவராக இருப்பவரு, கோல்டு சிட்டியின் கைக்கார அசெம்பிளிக்காரர். இவரின் கட்டுப்பாட்டில் இருக்கிற வர்த்தக நிறுவனமான சிலிகான் சிட்டி, தேசப்பிதா சாலையில் உள்ள காவிரி எம்போரியத்தில வனத்துறைக்காரங்க திடீர் ரெய்டு நடத்திருக்காங்க.
சாண்டில் ஐட்டங்களை சட்ட விரோதமாக வைத்திருந்ததை பறிமுதல் செய்திட்டாங்க. ஆபிசர் உட்பட சிலரிடம் வனத்துறைக்காரங்க துருவி துருவி விசாரிக்கிறாங்க. தலைவரம்மா என்ன சொல்லப்போறாங்க.
கோல்டு சிட்டி தொகுதி மேம்படணுமுன்னு யோசிச்சிருந்தா, விவசாயிகள் விளைப்பொருள் சந்தையை எதுக்கு அடுத்த ஸ்டேட் எல்லைக்கு கொண்டுப்போகணும். இது யாருக்கு லாபம் ஆகப்போகுது. கோல்டு தொகுதிக்கு இதனால் என்ன பயன் கெடைக்கப்போகுது. தொகுதி வளர்ச்சி அடைய, சாத்தியம் ஆகுமாங்கிற கேள்வி பலருக்கு உள்ளது.
கோல்டு சிட்டிக்குள் விசாலமான இடம் இல்லாமலா போனது. இப்பவும் கோல்டு சிட்டி ஜனங்களுக்கு காய்கறி விளைச்சல் மூன்றாம் கிளாஸ் சரக்கு தானே, வெளியிடங்களில் இருந்து வந்துக்கொண்டிருக்குது. ப.பேட்டை தொகுதியில் காலாகாலமாக இருக்கிற விளைப்பொருள் சந்தை சிட்டிக்குள்ளே தானே இருக்குது. அதனை பார்த்தாவது புரிஞ்சிக்க வேணாமா. ஏதோ, கிரானைட் கிடைக்குது என்பதை உள்நோக்கமா வெச்சி, ஸ்டேட் எல்லைக்கு கொண்டுப்போய் விளைப்பொருள் சந்தை அமைப்பதாக தோண்ட வெச்சு சந்தி சிரிக்குதே. கிரானைட் கதை என்னானதோ.
கோல்டு மைன்ஸ் துவங்கிய காலத்தில, இங்கிலீஷ்காரங்க, அடிப்படை வசதிக்கு முன்னுரிமை கொடுத்தாங்க. அவங்களால ஏற்படுத்தினது தான் குடிநீர், மின் இணைப்பு, ஆஸ்பிட்டல் வசதிங்க. அவங்க எல்லாம் நாட்டை விட்டு போயிட்டாங்க.
நுாறாண்டுக்கு முன் உருவான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டடம் மட்டுமே இருக்குது. ஆனால், 20 ஆண்டுகளாக பயனில்லாம இருக்குது. அதில இருந்த நவீன மருத்துவ கருவிகள், உள்கட்டமைப்பு சாதனங்கள் மாயமாகிடுச்சு.
பல உயிர்களை காப்பாற்றிய மருத்துவமனையே கவலைக்கிடமாக இருக்குது. பொறுப்பானவங்க பார்வைப்படாம இருக்குதே. இதுக்காக மீண்டும் இங்கிலீஷ்காரர்கள் தான் வரணுமா.
கோல்டு மைன்ஸ் பகுதியில் பயன்படுத்தாமல் இருக்கிற 100 ஏக்கரில் கேப்பிட்டல் சிட்டி குப்பைகளை கொண்டு வந்து கொட்டி, அதில் மின்சாரம் தயாரிக்கிற திட்டத்தை ஏற்படுத்த, ஸ்டேட் மின்துறை மந்திரி வந்து பார்வையிட்டாரு.
இதுதான் சரியான இடமுன்னு முத்திரையும் பதித்தாரு. கேப்பிடல் சிட்டியில் உள்ள குப்பைகளுக்காகவே 100 கி.மீ., துாரத்துக்கு தனிப்பாதை ஏற்படுத்த போறதாவும் சொன்னாரு. ஆனால் அவரின் பேச்சில் இருந்ததை செயலில் காணோம்.
இது போல தான், 1990 ல அனல் மின் நிலையம் அமைக்க ஏற்பாடு செஞ்சாங்க. முடிவா அந்த திட்டத்தை ராய்ச்சூருக்கு 'ஷிப்ட்' செய்திட்டாங்க.
ஆரம்பத்தில் பிளான்கள் எல்லாமே 'ஓகே' தான். ஆனால், கோல்டு சிட்டியில் ஜனங்க கண்டது வெறும் ஏமாற்றமே.
இப்போ தொழிற்பேட்டை கனவு திட்டத்துக்கு ஸ்டேட் மற்றும் சென்ட்ரல் நிதி ஒதுக்கீடு பற்றி எப்போ யார் அறிவிக்க போறாங்களோ. அடுத்த பட்ஜெட்டில் எதிர்பாக்கலாமா. இந்த திட்டமும் சயனைட் மண்ணில் கோல்டு எடுக்கிற கதையாக பேசிக்கொண்டே இருக்கணுமோ.

