ரா.பேட்டையின் தேசப்பிதா பெயரில் இருக்கிற மார்க்கெட்டின் கிழக்கு பகுதியில் மா.வண்டி ஸ்டாண்ட் இருந்தது.
மாட்டு வண்டிக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேற அங்கு வணிக வளாகம் கட்டுவதற்கு முனிசி., பிளான் போட்டு கட்டியது. அந்த கட்டடம் முழுமை அடையாமல் 20 வருஷத்துக்கு மேலாக குட்டிச்சுவராவே கிடக்குது.
இதுபற்றி இதுவரையில் பல ஆணையர்கள், நகர தந்தைகள், தாய்கள் என பொறுப்பானவங்க வந்தாங்க, போனாங்க. ஆனால் அந்த கட்டடம் இன்னும் முடிவுக்கு வரல.
சுமை துாக்கும் தொழிலாளர்கள் பலர் வட்டிக்கு பணம் வாங்கி, கடைக்காக டிபாசிட் கட்டினாங்க. இதற்கு எந்த பலனும் இல்லை. கடைகள் எப்போ கிடைக்கப் போகுதோ?
வீடற்றவர்கள், தெருவோர நடைபாதையில், பஸ், ரயில் நிலையங்களில் பூங்காக்களில் படுத்துக் கிடப்பவர்களுக்கென மறுவாழ்வு மையமாக ஆ.பேட்டை சூ. பாளையம் பக்கத்தில் முனிசி., 'சமுதாய பவன்' கட்டடத்தை ஒதுக்கினாங்க.
இங்கு தங்குற ஆண்கள் பெண்களுக்கென தனித் தனி அறை கட்டில், போர்வை, உணவு வசதிகள் எல்லாம் உண்டு என்று அறிவிச்சாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி 30 பேர் வரையில் தன்னார்வ தொண்டு நிறுவன பொறுப்பில் ஒப்படைச்சாங்க.
ஆனால் முனிசி.,யில் இருந்து அவங்களுக்கு பேசப்பட்ட தொகை வழங்காததால் அந்த பராமரிப்பு ஏற்ற வங்க 'ஜாகா' காலி செய்திட்டாங்க.
பழையபடி பஸ், ரயில் நிலையம் நிலைய நடைபாதைகளில் நடுங்கி, ஒடுங்கி படுக்குறாங்க. இதைப்பற்றி முனிசி., கண்டுக் கொண்டதாக தெரியல. இதுக்காக பெறப்படும் வரி என்னாகிறது. ஏழைகள் பேரில் செலவிடுவதாக கணக்கு காட்டப்படுகிறதா? கேட்க வேண்டிய பிரதிநிதிகள் சும்மா இருக்கலாமா?
ஆ.பேட்டை 'செக்குமேடு' பகுதியில் பூங்கா ஆக்குவதாக முனிசி.,யில் தீர்மானம் நிறைவேறியதா சொல்றாங்க. ஆனால் அதை பற்றி பேச்சே காணோம்.
அது தனியார் நிலமா? அல்லது முனிசி.,யின் சொத்தா? எதுவாயினும் இந்த சொத்து யாருடையது என்று இதுவரை யாரும் பெயர் பலகை வைக்காதது ஏன்?
முனிசி., காலி மனைகள், நிலம் எங்கெல்லாம் இருக்கிறதோ அவைகளை பாதுகாக்க வேலி அமைப்பதாக தீர்மானிச்சாங்க.
ஆனால் இதுவரைக்கும் ஏன் அமைக்க தயங்குறாங்களோ? அண்மையில் 523 அரசு நிலம் ஆபிசர்களை கையில் வைத்துக் கொண்டு ஜகஜால கில்லாடிகள் நிலம் சுருட்டியதை தீவிரமாக விசாரணை நடத்தி வராங்களே.
அந்த நிலம் மோசடியில் 3 ஆபிசர்கள் பேரில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்திருக்காங்க. எனவே, முனிசி., நிலத்தை காப்பாற்ற இது முனிசி சொத்து என பெயரிட வேணாமா?

