கோஷ்டி தலைவருக்கு எம்.எல்.சி., பதவி?
மறுபடியும் கோலாரை மீட்க, பெறும் முயற்சியில் கை காரங்க ஈடுபட்டு வராங்க. ஆனால், வேட்பாளர் தான் யாரென தெரியாமல் கோஷ்டிக்காரங்க தடுமாற்றத்தில் இருக்காங்க.
அரசியலில் புள்ளிவைத்தால் கோலம் போட தெரிந்தவரையே கடந்த லோக்சபா எலக் ஷனில் மண்ணை கவ்வ வெச்சிட்டாங்க. அவருக்கு பழைய ரணத்தின் வடு இன்னும் உறுத்தலாகவே இருந்து வருதாம்.
புலி பதுங்கி இருப்பது போல் இருந்து வரும் மாஜி செங்கோட்டைக்காரரின் அடுத்த ஸ்டெப், மினிஸ்டர் பதவியும் தன்னை விட்டு போயிட கூடாதாம். அதே நேரத்தில் கோலார் லோக்., தொகுதியும் தனது குடும்பத்தில் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
என்ன இருந்தாலும் இந்த 'கோலார்', தொகுதி கை இடம் போய் சேராதபடி, தாமரைக்காரரும், கை கோஷ்டிக்குள் அந்தரங்க வேலையை தொடங்கிட்டாராம்.
மாஜி சபாநாயகரான ஒரு கோஷ்டி தலைவர் மனசு வெச்சால் தான் 'வெற்றி தோல்வி'யை நிச்சயிக்க முடியும்னு இருக்குதாம், அதனால் தான் அவரை சரிக்கட்ட மேலிட கைகாரர்கள் சமாதானப் படுத்த போறாங்களாம். அவருக்கு கர்நாடக சட்ட மேலவையில் வாய்ப்பு கொடுத்து, மினிஸ்ட்டர் பதவியும் கொடுக்க போறாங்களாம்.
கணக்கு விபரத்தை சொல்ல வேணும்!
கொரோனா நேரத்தில் சிகிச்சைக்காக கம்பெனி மருத்துவமனையை தாம் தயார் செய்ததை கோல்டு சிட்டி மக்கள் மறக்க மாட்டாங்க என்று செங்கோட்டை தாமரை முனி மேடைகளில் ஞாபகப்படுத்துறாரு.
நியாயம் தான். ஆனால், அந்த மருத்துவமனையை பழையபடி மூடிட்டாங்களே. நிரந்தரமாக சுரங்க குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் ஜனங்களுக்கு ஒரு அரசு மருத்துவமனையை ஏற்படுத்தலயே இதுக்கு அவர் என்ன சொல்ல போறாரு.கம்பெனி மருத்து வமனையை புனரமைக்க நகர மக்கள், பொதுநல அமைப்புகள், என பலரும் உதவினாங்க சென்ட்ரல், ஸ்டேட்டை ஆண்ட 'தாமரை'யின் அரசுகளும் நிதியுதவி செய்தாங்களே, அது எவ்வளவு தான் வந்தது, என்ன செலவானதுன்னு சொல்ல வேணாமா. அதில் நிறைய குற்றம் குறைகள் இருந்ததா சொல்றாங்களே. அதை ஏன் மறைக்கனும்.
ஏமாற்றுமா தொழிற்பூங்கா?
தங்கமான நகரில் தொழிற் பூங்கா உருவாக கேபினட் ஒப்புதல் கொடுத்திருக்கு. இதற்கான நிலத்தையும் தொழில் மேம்பாட்டு துறையிடமும் வந்தாச்சு. ஆனாலும், இதற்கான பணியை தொடங்காமல் இருக்கலாமா. இதுக்காக அரசு ஏதாச்சும் நிதி ஒதுக்கியதா. வெளிநாட்டின் முதலீடு வருமா. எந்தெந்த கம்பெனி வர காத்திருக்கு என மக்கள் சவுண்டு விடுறாங்க.
வேலை வாய்ப்பு எல்லாம் லோக்கலுக்கா. அல்லது வழக்கம் போல வெளியிடத்து காரர்களுக்கா, இப்படி நகரில் வேலை இல்லாதவங்க கேள்வி களை அடுக்குறாங்க.
இந்த திட்டம் மெத்தனமாக நகருவதால், நடப்பு ஐந்தாண்டுகளில் தொழிற் பூங்கா வந்திடுமா. அல்லது இன்னும் காலம் கடத்துவாங்களா. கோல்டு சிட்டியில் அனல் மின் நிலையம் வரப்போகுதுன்னு சொன்னாங்க. அது வராமலே போனது.சைனாட் மண்ணில் கோல்டு எடுக்க போவதாக சொன்னாங்க. அதுவும் வந்த பாடில்லை. அதுபோல தொழிற் பூங்காவும் ஏமாற்றாமல் வந்திடுமான்னு கேட்கிறாங்களே.
இவர்கள் அடங்கலையே!
கேசம் பள்ளி கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் லஞ்சம் வாங்கினதை வீடியோ படம் பிடித்து வைரல் ஆக்கி இருக்காங்க.தாலுகா அதிகாரி, 'இந்த சம்பவத்துக்கு விளக்கம் கேட்டு லஞ்சம் வாங்கினவங்க இடத்தில் நோட்டீஸ் கொடுத்தாராம்'. இவ்வளவு தான் அவரின் அதிரடி நடவடிக்கை.
லஞ்சம் வாங்கினவங் களை காப்பாற்ற ஆபிசருக்கு இதுதான் 'ரூட்'.னு தெரியுமாம். ஏன்னா, எல்லாமே கூட்டாளிங்கன்னு விபரம் அறிந்த வட்டாரம் தெரிவிக்குது.
இவங்கள லோக் ஆயுக்தா பிடிக்கல. யாரோ செல்போன் வீடியோ எடுத்து அந்த காட்சிகளை வைரல் ஆக்கினால் தண்டிக்க முடியுமான்னு, சிலர் சப்பைக் கட்டு கட்டுறாங்க. லஞ்ச ஆபிசர்கள் அடங்கலயே.

