sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் செக்போஸ்ட்

/

தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்


ADDED : ஜன 29, 2024 11:03 PM

Google News

ADDED : ஜன 29, 2024 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வர்த்தகர்கள் வருத்தம்!

பொன்னகர் தாலுகா உருவாகிய பின், ஏ.பி.எம்.சி., எனும் விவசாய விளைப் பொருள் வர்த்தக குழுமத்தை ஏற்படுத்தணும் என்பது தொகுதியின் விருப்பமாக இருந்தது. இந்த ஏ.பி.எம்.சி.,யை கோல்டு சிட்டிக்குள் ஏற்படுத்தாமல் அடுத்த மாநில எல்லைக்கு கொண்டு போயிட்டாங்க.

இதனால் கோல்டு சிட்டிக்கு நேரடியாக கிடைத்த காய்கறிகள், உணவுப் பொருட்கள் திண்டாட்டம் ஏற்பட போகுதென சிறு வியாபாரிகள் அதிருப்தியில் இருக்காங்க.

ஏற்கனவே, தரமான காய்கறிகள் பிற நகரங்களுக்கு சென்று விடுகிறது. இரண்டாம் தர விளைப்பொருட்கள் தான்கோல்டு சிட்டிக்கு வந்து சேருது.

ஏற்கனவே, தாலுகா அலுவலகத்தையே கிராமம் பக்கம் கொண்டு செல்ல தாமரைக்காரர் முயற்சித்தார். ஆனால், அவரது போதாத நேரம், அசெம்பிளிக்கே செல்ல முடியல. கைக்கார மேடம், சிட்டிக்குள் தாலுகா ஆபிஸை கொண்டு வந்துட்டாங்க. இவரு, ஏ.பி.எம்.சி.,யை சிட்டிக்குள் அமைக்காமல், சிட்டியில் மார்க்கெட்டை 'டெவலப்' செய்யாம விட்டுட்டாங்க.

சிட்டியை விட்டு 20 கி.மீ., துாரத்துக்கு அப்பால் ஏ.பி.எம்.சி. யை கொண்டு போயிட்டாங்க. கொஞ்ச நாளாகவே சிட்டிக்காரங்களை மேடம் ஒதுக்கி இருக்காங்களோ. தேர்தல் நேரம் வரும் போது மட்டுமே தேவைக்கு அழைக்க போறாங்களோ.

கை கொடுக்குமா?

பத்து ஆண்டுக்கு மேலே, இம்மாவட்டத்தில், முன்னாள் அசெம்பிளிக்காரர் தான் தாமரையில் மெயின் தலைவராக காணப்பட்டார். செங்கோட்டைக்கு முனி தேர்வானதும், இவரின் 'ஒன் மேன்'' ஷோ பலரை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிடுச்சு. கோஷ்டிகள் உருவாகிடுச்சு.

அசெம்பிளி தேர்தல்ல ஜெயிக்க வேண்டிய சில தொகுதிகளும் கை நழுவிடுச்சு. லோக்., தொகுதிக்கு உட்பட்ட எட்டு அசெம்பிளி தொகுதிகளிலுமே தாமரை பூக்கவில்லை.

வரவிருக்கும் பெரிய தேர்தலிலே, எட்டு தொகுதியிலும் தாமரைக்கு ஓட்டு வேணும். இதுக்காக கோல்டு தொகுதியின் சிட்டி தலைவர் பம்பரமா சுழலுகிறார். ஆனால், தோல்வியில் சுருண்டவர், ஆர்வத்தை காண முடியல. ஆனாலும், அயோத்தியால், கோலாரை தக்க வைக்கலாம் என நம்புறாங்க.

ஆட்டம் எவ்வளவு நாள்?

இல்லாத ஊர்ல இலுப்பைப் பூ சர்க்கரை போல, தங்கவயல் சூரிய கட்சியை எப்படியாவது, வளர்க்க னும்னு மாநில தலைமை, ஏழு பேரை குழுவாக நியமிச்சாங்க.

மேற்கில் வேண்டுமானாலும் சூரியன் உதிக்குமே தவிர, கோலாரில் ஒற்றுமையை எதிர்பார்க்க முடியாது. அதுவும், ஏழுக்குள் ஒற்றுமை என்பதை கனவில் கூட எதிர்ப் பாக்க முடியாது என்பதை மேலிட தலைமை அறிந்ததால், கோலாரு அது கோளாறுன்னு கிடப்பில் போட்டுட்டாங்க. ஏழு பேரையும், மாநிலம் அழைத்து பேசப் போறாராம்.

அந்த குழுவில் ஒத்து போறதை விட ஒதுங்கி போவது மேலென மூத்த உறுப்பினர்கள் இருவர், விடுங்கன்னு வெளிப்படையாக தெரிவிச்சிருக்காங்க. விரைவில் புதிய குழு ஒன்று உருவாகலாம். ஆட்டம் போடுற சிலரை அடையாளம் இல்லாமல் ஒதுக்கி தள்ளப் போறதா உள்ளுக்குள் வேலை நடக்குது.






      Dinamalar
      Follow us