சில லட்சம் 'டீல்'
ஒரே ஒரு அடியும் விழாமல், துாசு கூட தட்ட விடாமல் பத்திரமாக மீட்க, கொலையுதிர் வழக்கில் பெரிய டீலிங் முடிந்திருக்கு.
காக்கிகளுக்கு வேலையை எளிதாக்க, கிரிமினலுக்கு பத்திர பாதுகாப்பு கொடுத்து, ஐந்து நாட்களுக்கு பிறகு ஒப்படைத்துள்ளனர்.
'மிஸ்டர் க்ளீன்' என தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொண்டவரின் சட்ட உதவியாக இச்சம்பவம் நடந்திருப்பதாக நகரில் பரவலாக பேசுறாங்க.
ஏற்கனவே, குடும்ப தகராறில் வரதட்சணை வழக்கு வேறு, நிலுவையில் இருக்கும் போது, 'மர்டர் கேஸ்' பரபரப்பாக பேசப்பட்டு வரும் போது, லாக்கப் பை விட்டு
வெளியே கொண்டு வர, சில லட்சம் 'டீல்' பேசி, பணம் கறந்தாச்சாம்.
பணம் கொடுத்தவங்க 'லாக்கப்' பை விட்டு வெளியே வருவாங்களா. இதுக்கு சட்டத்தில் உரிய வழி கிடைக்குமா. மேடை கதைகள் எல்லாம் சட்டத்துக்கு எடுபடுமா.
மேதாவிகளை காணவில்லை!
அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு ஊர்வலம், அரசு சார்பில் மாநிலம் முழுதும் நடத்தி வராங்க. நேற்று கோல்டு சிட்டியில் நடத்தினாங்க.
அரசியலமைப்பு சட்ட விதியின் படி இட ஒதுக்கீடு சலுகையைப் பெற்ற, பல பெரியவர்களை, இந்த ஊர்வலத்தில காணவில்லை.
'தனி'த்தொகுதியில் மட்டுமே போட்டியிட துடியாய் துடிக்கின்ற சர்வக் கட்சிக்காரர்கள், பல துறைகளின் அதிகாரிகள், ஊழியர்கள் ரெண்டு சதவீதம் பேர் கூட பங்கேற்கவில்லை.
உண்டு உறைவிடப் பள்ளி மாணவ - மாணவியர், அங்கன்வாடி பெண்கள் தான் கொடிகளை பிடிச்சு வந்தாங்க.
இட ஒதுக்கீடு சலுகையில் பதவி பெற்ற பலரும் கண்ணில் தென்படவில்லை. ஹாஸ்டல் மாணவர்களை அழைத்து வந்து ஊர்வலம் நடத்தி சோர்வை ஏற்படுத்திட்டாங்க.
திசை மாறிட்டாங்க!
மைன்ஸ் தொழிலாளர்கள் வீடுகள் கிடைக்க, இது வரை தாமரை 'முனி'யை தான் நம்பி இருந்தாங்க. இனி அவரை நம்பினால் பிரயோஜனம் இல்லை என தெரிந்து கொண்டு, 20 ஆண்டுகளாக பயன் படுத்தாமல் இருந்த, 1,000 ஏக்கர் பெமல் நிலத்தை மாநில அரசு திரும்ப பெற மேடம் எடுத்த முயற்சி 'சக்சஸ்' ஆனது.
இதேபோல, மைனிங் பகுதியில் பயன் படுத்தாமல் உள்ள 5,500 ஏக்கர் நிலத்தையும் மாநில அரசு கையகப்படுத்த முயற்சிக்க வேணும்.
குடியிருக்கும் வீடுகளை இலவசமாக வழங்க வேணுமென, முன்னாள் மைன்ஸ் தொழிலாளர்கள் மனு கொடுத்து இருக்காங்க. ஆவன செய்வதாக உறுதி கூறியிருக்காராம்.

