இலை போட்டி!
கோல்டு நகரின் இலை கட்சியின் ஒரு அணியில் இருந்ததோ ஒருத்தர் மட்டும் தான். அவரும் மாற்று அணிக்கு போயிட்டாரு. இவங்க செயல்பாடுகளை சுவரொட்டிகளில் மட்டுமே காட்டுறாங்க. மற்ற நேரங்களில் எங்கே இருக்காங்கன்னு தெரியல.
லோக்சபா தேர்தலில், தாமரையின் கூட்டணி இல்லை என இலை மேலிடம் தெளிவாக அறிவிச்சதால், கோலாரில் போட்டியிட, கார்மென்ட்ஸ் சங்கத் தலைவரு களத்தில் இறங்க தயாராகி வர்ராராம்.
பலியிட துடிப்பதா?
வயது முதிர்ந்தவங்களுக்கு சீட் இல்லை என்பது தாமரையின் திட்டம். எனக்கென்ன 85 வயதா ஆகிவிட்டது. எனக்கு சீட் இல்லாமலா போய் விடும் என்று பிரஸ் காரர்களிடம் தடாலடியாக தாமரை முனி, கம்பீரத்தை காட்டி இருக்கிறார்.
ஊடக காரர்கள் தான், குழப்பத்தை ஏற்படுத்துறாங்க. அப்படியே நாங்க விட்டு கொடுத்தாலும், மீண்டும், 'எங்கள் பிரதமர்' ஆட்சி தான். இதை இவங்க மாத்தி சொல்லாமல் இருந்தாலே போதும்.
ஊடகத்துக்காரர்கள் அறிவு ஜீவிகள் தான்; அதுக்காக யாரையாவது பலியிட துடிப்பதா என்று தாமரை முனி ஆதரவாளர்கள் கோபத்தை காட்டுறாங்க.
பிளவுபடுத்தவா கூட்டம்?
கோல்டு சிட்டியில் 226 பூத்களையும், கைகாரங்க தலா 10 பேர் வீதம் தயார்படுத்தி இருக்காங்க. ஆனால் தாமரையில் தடுமாற்றம் தீரலை.
முன்னாள் அசெம்பிளிக்காரர், நகரில் கட்சி கூட்டத்தை நடத்தினாரு. அதில் கட்சியின் சிட்டி தலைவரும், வில்லேஜ் தலைவரும் பங்கேற்கல்லை. இவர்களை கட்சியின் 'துரோகிகள்' என்று சிலர் வசைபாடி பொறிந்து தள்ளினாங்க.
கட்சியை ஒன்றுபடுத்த, பல இடங்களில் கூட்டம் நடத்துறாங்க. ஆனால் கோல்டு சிட்டியில் பிளவு படுத்தவா கூட்டம் நடத்தினாங்க என்று பலரும் யோசிக்கிறாங்க. தாமரை 'முனி' யின் ஆதரவாளர்களுங்க பிரிந்தே இருக்காங்க என்பது மேலிடத்துக்கும் தகவல் எட்டியிருக்கு.

