தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்


ADDED : பிப் 27, 2024 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 06:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திடீர் மாற்றம்!

மந்திரியா இருப்பவரை கோலாரில் இறக்கினால், அவரின் அரசியல் அத்தியாயத்தையே முடிச்சிடுவாங்கன்னு உள்ளுக்குள்ளே சந்தேகம் ஏற்பட்டிருக்குதாம்.

பூத் கமிட்டி கூட்டத்திலேயே இரு கோஷ்டிக் காரங்க சட்டை கிழிந்த கதை, விரிசலுக்கு அடையாளம். மந்திரியாக இருப்பவங்களையே பெரிய தேர்தலில் நிறுத்த வேணும்னு மேலிடமும் சொல்லி, தேர்தல் செலவையும் அவர்களையே கவனிக்கணுமுன்னு சொல்லிட்டாங்களாம். அதனாலே, கோலார் தொகுதிக்கு மந்திரியாக இருக்கிறவரை விட, கோல்டு சிட்டியில் எம்.எல்.ஏ.,வாக இருக்கிற அவரது மகளையே போட்டியிட வைக்க வேண்டும்னு சீரியசா 'டிஸ்கஷன்' நடந்து வருது.

எதிர்ப்பாளர்களுக்கும் கூட அசெம்பிளி மேடம் மீது பரிவு இருக்குதாம். அதனால் அதிருப்தி இருக்காது; சுமூகமாக தீர்வு காணலாமுன்னு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

திணறும் புல்லுக்கட்டு!

கர்நாடகாவில் புல்லுக் கட்டுக்காரர்களின் எதிர்ப்பார்ப்பில் இருந்த, 'கோலார் தொகுதி' இப்போது இல்லையென, முல்பாகல் அசெம்பிளிக் காரரின் வட்டார தகவல் தெரிவிக்குது.

பெர்ர்ய கவுடாவின் ஒரு மகன், ஒரு மருமகன், இரண்டு பேரப் பிள்ளைகள் ஆகியோருக்கான தொகுதிகள் மட்டும் கிடைச்சா போதும்னு இருக்காங்களாம். இந்த பட்டியலில், கோலார் இல்லையாம்.

எனவே, கோலாரை மறுபடியும் தாமரை வசமே வருமென தகவல் கசிந்துள்ளது. இதனாலேயே தாமரை 'முனி' அதிரடியா எட்டு அசெம்பிளி தொகுதிகளிலுமே சூறாவளி வேகத்தில் அயோத்தி கோவில் படங்களுடன் உருவாகியுள்ள காரில் சுழல தொடங்கிட்டாரு. இதனால் புல்லுக் கட்டுக்காரங்க திணறுறாங்க.

உள் ஒப்பந்தம் நடந்திருக்காம்!

பெமல் தொழிற்சாலை பயன்படுத்தாமல் வைத்திருந்த 972 ஏக்கர் காலி நிலத்தை, ஸ்டேட்காரங்க வாங்கிட்டாங்க. அதனை, தொழிற்சாலை மேம்பாட்டு துறையிடம் மா.அரசு ஒப்படைச்சிருக்காங்க. இந்த பகுதியில் தான் ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைச்சிருக்காங்க. அதற்கு பக்கத்தில் சட்ட பிதா மியூசியம் அமைக்க நிலத்தை ஒதுக்கினாங்க.

இது நகரின் மெயின் பகுதி. இங்கு பெமல் தொழிற்சாலை, போலீஸ் நிலையம், விளையாட்டு அரங்கம், மெடிக்கல் சென்டர் என எல்லாமே 100 மீட்டர் பகுதியில் அமைந்துள்ளது. 500 மீட்டர் தொலைவில் தான் சென்னை -- பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலை உருவாகி வருது. அப்பேற்பட்ட இந்த இடத்தை பெரிய தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க உள் ஒப்பந்தம் நடந்திருக்குதாம். இதனாலேயே, சட்டப்பிதா மியூசியத்துக்கு கொடுத்த இடத்தை திருப்பி வாங்கிட்டாங்களாம். இந்த பிரச்னை லோக்., தேர்தலில் விஸ்வரூபம் எடுக்க போகுது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us