நிலம் அபகரிப்பு எச்சரிக்கை!
பொன் விலைய விட மண் விலை தான், எக்கச்சக்கமா ஏறி வருது. அதனாலே, நிலம் சுருட்டும் மாபியாக்களும் அதிகரித்து வராங்க. இதுக்கு சில ரெவினியு அதிகாரிகள், துணை போவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாங்குற சம்பளத்தை விட, பல மடங்கு பணம் வருவதால், கிரிமினல் வேலைகளுக்கு துணை போறாங்க. சில கிராமங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இதில் தொடர்பு உள்ளதாம்.
ப.பேட்டை, டி.கே.ஹள்ளி பகுதியில் கோல்டன் புராஜக்ட் கம்பெனியின் நிலத்துக்கான கோர்ட் ஆர்டர் போர்டு வைக்கப்பட்டு இருந்தும், 14 ஏக்கரில் சிலர் ஆக்கிரமிப்பு வேலையை செய்து வருவதாக வட்டாட்சியர் ஆபிசில் புகார் செஞ்சிருக்காங்க.
போலி ஆவணங்கள் தயாரிப்பது யார். அவர் மீது யார் நடவடிக்கை எடுப்பாங்க.
திருடர்கள் கையில் சாவி இருக்குது. இந்த நிலம் சுருட்டுகிறவங்களை சட்டம் தண்டிக்க வேணுமுன்னு விபரம் தெரிஞ்சவங்க சொல்றாங்க.
கோஷம் திடீர் மாற்றம்!
ஒவ்வொரு வார்டிலும் வீட்டு மனை வழங்குவதாக கூறி, விண்ணப்பங்களை அசெம்பிளி தேர்தலின் போது வழங்கினாங்க. அவைகள் நகராட்சியில் மூட்டைக்கட்டி வெச்சதாக சொல்றாங்க.
இப்போ பெரிய தேர்தல் நெருங்குது. அதே போல விண்ணப்ப படிவங்களை வழங்கி வராங்க. அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தை, தேர்தல் நேரத்தில் மட்டுமே கூறுவதால் பலரும் பலவிதமாக பேசுறாங்க.
தேர்தல் நேர 'ஸ்டென்ட்' என்று ஜனங்க பேசுவதை, அசெம்பிளி மேடத்தின் சகாக்களாவது, சொல்ல வேண்டியவருக்கு சொல்லலாமே.
நான்கைந்து முறை நடந்த தேர்தலின் போது, மைன்சை திறப்பதாக வாக்குறுதி தந்தாங்க. இந்த முறை அது பற்றி பேசாமல், அனைவருக்கும் வீடு; அனைவருக்கும் வேலையென பிரச்சாரமுன்னு பேச துவங்கி இருக்காங்க.

