ADDED : டிச 31, 2024 05:39 AM

தங்கவயல்: தங்கவயலில் இருந்து சென்றுள்ள பாதயாத்திரை பக்தர்கள், இன்று மதியம் திருத்தணி முருக பெருமானை தரிசிக்கின்றனர்.
ஆண்டுதோறும் தங்கவயலில் இருந்து திருத்தணிக்கு முருக பக்தர்கள் நடந்தே சென்று வருகின்றனர். இம்மாதம் 26ம் தேதி பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
இன்று மதியம் 12:00 மணிக்கு திருத்தணியில் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். 'தொடர்ந்து, 40 ஆண்டுகளாக 225 கி.மீ., பாதயாத்திரையாக சென்று முருகனை தரிசனம் செய்வோம்' என ரமேஷ் சாமியார் தெரிவித்தார்.
திருப்படி பஜனை
தங்கவயலில் இருந்து அமரர் ரங்கநாத பாகவதர், சுப்பையா செட்டியார், விஜயகுமார், அன்பழகன் உட்பட முருக பஜனை குழுவினர் திருப்பணி உற்சவத்தை துவக்கினர்.
பக்தி பஜனை நிகழ்ச்சியை டிசம்பர் 31ம் தேதி இரவு 11:30 மணி முதல் ஜனவரி 1 அதிகாலை 1:15 மணி வரை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு 56வது ஆண்டாக நடத்துகின்றனர். இக்குழுவில் பாஸ்கரன், திருமுருகன், தேவேந்திரன், தணிக்கை செல்வன், கருணாகரன், மணி, கவுதம், குமரேசன், மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.
இவர்கள் இன்று இரவு 11:30 மணி முதல் ஜனவரி 1ம் தேதி அதிகாலை, 1:15 மணி வரையில் பக்தி பஜனையும், அதனை அடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜையும், மதியம் 12:00 மணிக்கு அன்னதானமும் வழங்குகின்றனர்.