ADDED : நவ 09, 2024 09:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தராரி: 'நான் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் இரண்டு முறை கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன். இனி அந்தத் தவறை செய்ய மாட்டேன்,' என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.
பீஹாரில் 4 சட்டமன்ற தொகுதிகளில், நவ.13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று நடந்த இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில், பா.ஜ., வேட்பாளர் விஷால் பிரஷாந்த்திற்கு ஆதரவாக, மாநில முதல்வர் நிதிஷ்குமார் பேசினார்.
அவர் பேசியதாவது:
நான் ஏற்கனவே கூறியது போல, மீண்டும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், நிரந்தரமாக இருப்பேன். கடந்த காலத்தில் ஆர்.ஜே.டி.,யோடு இரண்டு முறை கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன். இனி அவ்வாறு செய்ய மாட்டேன்.
இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.