தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அந்த பிரதமர் வேறு!

அந்த பிரதமர் வேறு!

அந்த பிரதமர் வேறு!


ADDED : ஜூலை 27, 2025 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2025 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகிஸ்தானுடனான கார்கில் போர் முடிந்த மூன்று நாட்களுக்கு பின், நான்கு பேர் அடங்கிய குழுவை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அமைத்தார். ஆனால், 'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அப்படி எதுவும் செய்யவில்லை. அப்போதுஇருந்த பிரதமர் வேறு; பா.ஜ., வேறு.

ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்

புறக்கணிப்பாரா?


பயங்கரவாதமும், பேச்சும் ஒன்றாக பயணிக்க முடியாது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். ஆனால், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா - பாக்., அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியை அமித் ஷா புறக்கணிப்பாரா அல்லது கண்டு களிப்பாரா? அவரது மகன் ஜெய் ஷா நிர்வகிப்பதால், இந்த போட்டி நடக்கலாம்.

பவன் கெரா செய்தித்தொடர்பாளர், காங்.,

தேர்தல் கமிஷன் கடமை!

நாட்டில் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்துவது என்பது, தலைமை தேர்தல் கமிஷனின் கடமை. அந்த நம்பிக்கைக்குரிய பொறுப்பை, தேர்தல் கமிஷனுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ளது. அதன்படி தேர்தல்களை தேர்தல் கமிஷன் நடத்தும் என, நம்புகிறேன்.

மீரா குமார் மூத்த தலைவர், காங்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us