ADDED : பிப் 02, 2024 11:18 PM

விஜயபுரா,: ஹம்பி உற்சவத்தை ஒட்டி, ஹொஸ்பேட் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது.
விஜயநகரா மாவட்டத்தில், ஹம்பி உற்சவம் நேற்று துவங்கியது. ஹம்பி உலக பாரம்பரிய தள மேலாண்மை ஆணைய அலுவலகம் பின்புறத்தில், மாவட்ட பஞ்சாயத்து, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் துறை ஏற்பாடு செய்திருந்தது.
கால்நடை கண்காட்சியை, மாவட்ட பொறுப்பு வகிக்கும் வீட்டு வசதி தறை அமைச்சர் அமைச்சர் ஜமீர் அகமது கான் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில், 52 ஜோடி காளைகள் பங்கேற்றன.
பின் அவர் கூறுகையில், ''மாவட்ட நிர்வாகம் நிகழ்ச்சியை நேர்மையாக ஏற்பாடு செய்து உள்ளனர். உள்ளாட்சி நிர்வாகம் புறக்கணிக்கப்படவில்லை. அனைத்தும் சரியாக நடக்கிறது. விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தற்போது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.
தானிய மேளா
மாதங்க பர்வத மைதானத்தில் பழம், மலர் கண்காட்சியும், தானிய மேளாவும் இடம் பெற்றது. இந்த மேளாவில் பல வகையான உருவங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் சிறுதானியங்களில் செய்யப்பட்ட உணவை, மக்கள் உண்டு சுவைத்தனர்.
விவசாய கருவிகள், குழந்தைகளுக்கான பொம்மைகள், மரப்பெட்டி ஆகியவை குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கின்றன.
உலக புகழ் பெற்ற கமல் மஹால், மலர்களால் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கிருஷ்ணதேவராயரின் தர்பார் உட்பட பிரசித்தி பெற்றவை மலர்களால் வடிவமைக்கப்பட்டு இருந்தன.

