UPDATED : செப் 21, 2024 08:22 PM
ADDED : செப் 21, 2024 03:30 PM

நகை என்பது ஒரு பொருள் அல்ல அது ஒருவித உணர்வு என நம்பும் நிறுவனம் ஜோஸ் ஆலுக்காஸ். கடந்த 60 ஆண்டுகளாக பல்வேறு நகரங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றில் மக்களுடன் மக்களாக தொடர்பில் உள்ளது. ஒவ்வொருவரும் இந்த பிராண்ட் உடன் தங்கள் சொந்த அனுபவத்தை கொண்டுள்ளனர். வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், நலன் விரும்பிகள் என அற்புதமான மனிதர்களின் உணர்வுகள், நினைவுகளைப் படம் பிடிக்கும் அழகான கதையை ஜோஸ் ஆலுக்காஸ் வைத்துள்ளது.
மக்கள் வெவ்வேறு பின்னணியில் இருந்து வருகிறார்கள். வெவ்வேறு நகரங்களில் வாழ்கிறார்கள். வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் ஜோஸ் ஆலுக்காஸ் உடன் நம்பிக்கை, அன்பு மற்றும் விசுவாசத்தினை கொண்டுள்ளனர். இந்த நிறுவன கதையில் ஒவ்வொரு நினைவுகளும், கதைகளும் தனித்துவமானது மற்றும் இதயப்பூர்வமானது. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிராண்ட் தொடங்கப்பட்டபோது, அது ஒரு மனிதனின் பார்வையாக இருந்தது, ஆனால் இன்று அது ஆயிரக்கணக்கான மக்களின் கூட்டு முயற்சியாக உள்ளது.
ஒரு பிராண்டாக, எங்கள் நகைகள் பலரின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல தலைமுறையினர் ஜோஸ் ஆலுக்காஸ் உடன் ஷாப்பிங் செய்துள்ளனர். இது இந்த பிராண்டின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் சான்றாகும். இதுமாதிரி பல அழகான ஜோஸ் ஆலுக்காஸ் கதையின் மூலம் நம்மை பல நினைவுகளுக்கு அழைத்து செல்கிறது. இந்த நம்பிக்கையும் ஆதரவும் தான் ஜோஸ் ஆலுக்காஸை தங்க நகைத் துறையில் நம்பகமான மற்றும் புகழ்பெற்ற பெயராக உயர்த்தியது. சிறு கனவுகளோடு கேரளாவின் ஒரு சிறிய நகரத்தில் தொடங்கிய இந்த பயணம் இன்று நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் தேசிய அளவிலான பிராண்டாக உயர்ந்துள்ளது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் இது அமைந்துள்ளது.
இதே நம்பிக்கை உடன் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் தனது பயணத்தை முன்னோக்கிச் செல்லும் என்பதில் உறுதியாக இருக்கிறது. தங்கம், வைரம், பிளாட்டினம் ஆகியவற்றில் சிறந்த மற்றும் குவாலிட்டியான நகைகளை வடிவமைத்து தொடர்ந்து மக்களுக்கு வழங்குவர். தொடரட்டும் இந்த பிரகாசமான ஒளி.