sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தன்னம்பிக்கையின் தவப்புதல்வி பல்லவி

/

தன்னம்பிக்கையின் தவப்புதல்வி பல்லவி

தன்னம்பிக்கையின் தவப்புதல்வி பல்லவி

தன்னம்பிக்கையின் தவப்புதல்வி பல்லவி


ADDED : டிச 01, 2024 11:15 PM

Google News

ADDED : டிச 01, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலச்சரிவால் தன் குடும்பத்தை இழந்த பெண்ணொருவர், மனம் தளராமல் படிப்பில் கவனத்தை திருப்பி, 'டாக்டரேட்' பட்டம் பெற்றுள்ளார். மற்றவருக்கு முன் உதாரணமாக வாழ்கிறார்.

இயற்கை சீற்றத்தை யாராலும் தடுக்கவோ, எதிர்க்கவோ முடியாது. பலரின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. அதே போன்று, 2006ல் மடிகேரியில் நடந்த நிலச்சரிவு, ஒரு பெண்ணை ஆதரவற்றவராக ஆக்கியது.

குடகு, மடிகேரியின் மங்களா தேவி நகரில் சிறிய வீட்டில் வசித்தவர் ராதா பட். இளம் வயதிலேயே கணவரை இழந்த இவர், தினக்கூலி வேலை செய்து பிள்ளைகளை காப்பாற்றினார். 2006ல் மடிகேரியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் ராதாபட், இவரது இளைய மகள் ஜோதி, 14, மகன் அபிஷேக், 12, உயிரிழந்தனர். மூத்த மகள் பல்லவி, 16, மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

தன்னம்பிக்கை


ஒரே இரவில் பல்லவி, குடும்பத்தை இழந்து ஆதரவற்றவரானார். குடியிருந்த வீட்டையும் இழந்தார். ஆனால் மன உறுதி, தன்னம்பிக்கையை இழக்காத அவர், வாழ்க்கையில் போராடி உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார். டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளார்.

இது குறித்து, பல்லவி கூறியதாவது:

நிலச்சரிவு ஏற்பட்டு ஒரே நாளில், என் தாய், தம்பி, தங்கையை இழந்தேன். நான் மட்டும் பிழைத்தேன். அசம்பாவிதம் நடந்து ஒரு மாதத்துக்கு பின்தான், எனக்கு இந்த விஷயம் தெரிந்தது.

முதலில் என் தாயும், தம்பி, தங்கையும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக, என்னிடம் கூறியிருந்தனர். அவர்களின் இறுதி சடங்கு நடந்தது கூட எனக்கு தெரியாது.

இந்த சம்பவம் என் மன நலத்தை, அதிகம் பாதித்தது. அவ்வப்போது தற்கொலை எண்ணம் ஏற்பட்டது. ஆனால் என் தாய்க்கு, தன் பிள்ளைகள் உயர் கல்வி பெற வேண்டும். ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. எனவே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட்டு, படிப்பில் ஆர்வம் காட்டினேன்.

சவால்கள்


என் சித்தப்பா சுந்தர், சித்தி ருக்மிணி எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் நன்றாக படிக்கவும் ஊக்கப்படுத்தினர். சில நண்பர்கள், நலம் விரும்பிகள் என்னை சந்தித்து ஆறுதல் கூறி, தைரியப்படுத்தினர். புத்தகம் படிக்கும் என் பழக்கம், பல சவால்களை கடக்க எனக்கு உதவியாக இருந்தது. யாரையும் சார்ந்திராமல் சுதந்திரமாக வாழ ஆரம்பித்தேன்.

பப்ளிக் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தேன். மடிகேரியின் மேத்யூ, என் பள்ளி ஆசிரியர் சிஸ்டர் சிசிலி, நாராயணகவுடாவின் உதவியை, என்னால் மறக்க முடியாது.

நடந்த சம்பவத்துக்கு, மாநில அரசு எனக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. இந்த பணத்தை என் படிப்பை முடிக்க பயன்படுத்தினேன். மங்களூரு பல்கலைக்கழகத்தில் இருந்து, வர்த்தகம் விஷயத்தில் முதுகலை பட்டப்படிப்பு பெற கடன் பெற்றேன்.

டாக்டர் அனுசுயா வழி காட்டுதலில், புத்தகம் எழுதினேன். வங்கிகள் தொடர்பாக ஆய்வு செய்து, புத்தகம் எழுதி டாக்டரேட் பட்டம் பெற்றேன். தற்போது நான் ஜெயின் பல்கலைக்கழகத்தில், உதவி பேராசிரியராக பணியாற்றுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us