sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பள்ளி, கல்லுாரி பராமரிப்பில் பெங்களூரு மாநகராட்சி மெத்தனம் கவலையுடன் கல்வியை தொடரும் மாணவ - மாணவியர்

/

பள்ளி, கல்லுாரி பராமரிப்பில் பெங்களூரு மாநகராட்சி மெத்தனம் கவலையுடன் கல்வியை தொடரும் மாணவ - மாணவியர்

பள்ளி, கல்லுாரி பராமரிப்பில் பெங்களூரு மாநகராட்சி மெத்தனம் கவலையுடன் கல்வியை தொடரும் மாணவ - மாணவியர்

பள்ளி, கல்லுாரி பராமரிப்பில் பெங்களூரு மாநகராட்சி மெத்தனம் கவலையுடன் கல்வியை தொடரும் மாணவ - மாணவியர்


ADDED : நவ 08, 2024 11:01 PM

Google News

ADDED : நவ 08, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏழை, நடுத்தர குடும்பத்தினரின் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, கல்லுாரி கட்டடங்களை சீரமைப்பதில் பெங்களூரு மாநகராட்சி அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. இதனால், மாணவ - மாணவியர் கவலையுடன் கல்வியை தொடர வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சியின் சார்பில் மழலைப் பள்ளி, தொடக்க உயர்நிலைப் பள்ளி, பி.யு., கல்லுாரிகள் என 128 கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், 24,400 மாணவர்கள் படிக்கின்றனர்.

பெங்களூரில் நுாற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் உள்ளன. மாநகராட்சி பள்ளிகளில் வசதிகள் இல்லாததால், பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

அவலம்


l பெங்களூரு மாநகராட்சியின் பெரும்பாலான பள்ளிகள், கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை

l விளையாட்டு மைதானம், வளாகம் இல்லை. கழிப்பறைகள் இருந்தாலும், துாய்மை என்பது கேள்விக்குறி தான்

l சில பள்ளிகள், கல்லுாரிகளில் கூரைகளின் காரை பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன

l மழைக்காலத்தில் மாணவர்கள் உயிருக்கு பயந்தே நாட்களை கழிக்கின்றனர்.

இந்த பிரச்னைகளை தவிர்க்க, அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டி, குழந்தைகள் கல்வி கற்க நல்ல சூழலை ஏற்படுத்துவதற்கு மாநகராட்சி அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.

மோசமான பணிகளால், கட்டுமானத்தில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழுகின்றன. ஆனாலும், மாநகராட்சியும், கல்வித்துறையும் விழித்துக் கொள்ளாமல் உள்ளன. அரசு மானியம் வழங்கப்பட்டாலும், கட்டடங்கள் கட்டுவதற்கான டெண்டர் கோரப்படவில்லை.

பாழடைந்த பள்ளி அறைகளால், மாணவர்கள் அடிக்கடி இடம் மாற்றப்படுகின்றனர்.

இவை மட்டுமின்றி ஆசிரியர்களின் சம்பள பிரச்னை; ஒப்பந்த ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. தேர்வு நேரத்திற்கு ஏற்ப மாணவர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி அளிக்காமல் மெத்தனம்.

கன்னட பள்ளிகள், உட்பட சிறுபான்மை மொழி பற்றி அதிகாரிகளின் அக்கறையின்மை என அனைத்து மட்டங்களிலும் மாநகராட்சியின் அலட்சியம் தெரிகிறது.

அறிக்கை


கடந்த ஆண்டு சிவாஜி நகரில் உள்ள மழலை பள்ளி கட்டடம் இடிந்து விழுந்தது. இதை அடுத்து மாநகராட்சிப் பள்ளிகள், கல்லுாரி கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு தரக்கட்டுப்பாட்டு துறையிடம் மாநகராட்சி கூறியது.

இதுதொடர்பாக தலைமை ஆணையர், கடந்த ஆண்டு நவம்பர் 27ல் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார்.

இதன்படி, மாநகராட்சியின் தரக்கட்டுப்பாட்டு துறையினர், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளின் ஆசிரியர்கள், முதல்வருடன் ஆலோசனை நடத்தி ஆய்வறிக்கை தயாரித்தனர். இதில், 'மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் 19 கட்டடங்கள் இடியும் நிலையிலும் 67 கட்டடங்கள் சீரமைக்கப்பட வேண்டிய நிலையிலும் உள்ளன' என குறிப்பிடப்பட்டிருந்தது.

பரிந்துரை


'இக்கட்டடங்களை தலைமை பொறியாளர்கள் மற்றும் மண்டல திட்ட பிரிவு செயல் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் இணைந்து பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல், சீரமைத்தல், தேவைப்பட்டால் மீண்டும் கட்டுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தரக்கட்டுப்பாட்டுத் துறை தலைமை பொறியாளர் பரிந்துரை செய்திருந்தார்.

இந்த நிலையில், பழுதடைந்த கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டடங்களை கட்டும் பணிகள் முடிக்கப்படவில்லை. 'அம்ருத் நகரோத்னா' திட்டத்தின் கீழ், பள்ளி கல்லுாரி, கட்டடங்கள் கட்டவும், புதுப்பிக்கவும் அரசு 190 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

கட்டட தரக் கட்டுப்பாட்டுத் துறையால் கண்டறியப்பட்ட 19 கட்டடங்களில், ஏழு கட்டடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டு, கட்டுமான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள கட்டடங்களை இடிக்கும் பணி கூட துவக்கவில்லை. இதனால் இங்குள்ள பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகள், மாநகராட்சி கட்டடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அறிகுறிகள்


அடுத்த கல்வியாண்டுக்குள் புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக அறிகுறிகளும் தென்படவில்லை. ஏனெனில், அதற்கான டெண்டர் பணிகளே இன்னும் துவங்கப்படவில்லை.

கனகனப்பாளையா, மல்லேஸ்வரம், பாரதிநகர் உள்ளிட்ட ஏழு இடங்களில் பாழடைந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஜோக்பாளையாவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

மாநகராட்சி மழலைப்பள்ளி உட்பட பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளின் கல்வியை மேம்படுத்தவும், பிற வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் சி.எஸ்.ஆர்., எனும், 'கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி' திட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசு விதித்துள்ள விதிமுறைப்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு, தலைமை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

இதில், ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே முன் வந்து, ஐந்து பள்ளிகளின் கழிப்பறைகளை சீரமைத்தது. மொத்தத்தில் பள்ளி, கல்லுாரி கட்டடங்கள் பலமான நிலையில் அமைய வேண்டுமானால், சீரமைக்கும் பணிகள் அவசியம்.

***

அரசு தமிழ் பள்ளி சேதம் செய்தி படங்கள்

9_DMR_0002

பள்ளியின் மீது படர்ந்துள்ள மரக்கிளைகள். இடம்: அரசு தமிழ் உயர் துவக்க பள்ளி, அசோக் நகர், பெங்களூரு.

*

9_DMR_0003, 9_DMR_0004, 9_DMR_0005

பள்ளி கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இடம்: தெய்வானை அம்மாள் அரசு துவக்கப் பள்ளி, எச்.ஏ.எல்., விமானபுரா. பெங்களூரு.

*

9_DMR_0006

இடிக்கப்பட்ட நுாற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தமிழ் உயர் துவக்கப் பள்ளியை தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் பார்வையிட்டார். இடம்: திம்மையா சாலை, பெங்களூரு

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us