டில்லியில் சிறப்பாக நடந்த முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு
டில்லியில் சிறப்பாக நடந்த முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு
UPDATED : ஜன 29, 2024 06:32 PM
ADDED : ஜன 29, 2024 05:43 PM

புதுடில்லி: குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்கள், பாசறைக்கு திரும்பும் நிகழ்வு டில்லி விஜய் சவுக்கில் நடந்தது. ஆயுதப்படை வீரர்கள், டிரம்ஸ் இசைக்குழுவினர் அணிவகுப்பு நடத்தினர்.
குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்த மூன்றாவது நாள், அதில் பங்கேற்ற முப்படை வீரர்கள் தங்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு நடப்பது வழக்கம். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வு புதுடில்லியின் விஜய் சவுக்கில் நடந்தது.
பழைய, புதிய பார்லிமென்ட் கட்டடங்கள் மற்றும் ராஷ்டிரபதி பவனில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூவர்ணங்களில் வண்ண விளக்குகள் ஜொலித்தன.