தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மிகப்பெரிய ஊடுருவல்காரர்!

மிகப்பெரிய ஊடுருவல்காரர்!

மிகப்பெரிய ஊடுருவல்காரர்!


ADDED : மார் 23, 2026 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 02:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மிகப்பெரிய ஊடுருவல்காரர்!

மேற்கு வங்க சட்டசபை தேர்தல், ஜனநாயக உரிமைகளையும், பன்மைத்துவம் வாய்ந்த நம் சமூக கட்டமைப்பையும் பாதுகாப்பதற்கான ஒரு போர். நம் மாநிலத்தை குறிவைத்து, மக்களை பிளவுபடுத்த முயல்வோர் நரகத்திற்கு செல்வர். பிரதமர் மோடியும் அவரது அரசும் தான் மிகப்பெரிய ஊடுருவல்காரர்கள். மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்

போட்டியே இல்லை!

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமைக்கு எந்த போட்டி யும் இல்லை. வங்கத்தின் பெருமை குறித்து கேள்வி எழும்போதெல்லாம், மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கின்றனர். மம்தா, வங்கத்தின் தாயாகவும், சகோதரியாகவும், மகளாகவும் திகழ்கிறார் என்பதை அவர்கள் நன்கு அறிவர். சத்ருகன் சின்ஹா லோக்சபா எம்.பி., திரிணமுல் காங்கிரஸ்

ரகசிய ஒப்பந்தம்! கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ., - பா. ஜ., இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளது. இதன்படி, பலவீனமான வேட்பாளர்களை ஆளுங்கட்சி நிறுத்திஉள்ளது. இந்த கூட்டணியை, காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முறியடிக்கும். ஆளும் அரசுக்கு எதிராக, மக்களின் மனநிலை மிகவும் வலுவாக உள்ளது. வி.டி.சதீசன் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us